முதலமைச்சர் முதல் அனைவரும் உளறுவாயன்கள்.. மக்களால் அடித்து விரட்ட வேண்டிய கேவலமான ஆட்சி திமுக.. Raja விமர்சனம்

By vinoth kumarFirst Published Jun 9, 2022, 7:38 AM IST
Highlights

தமிழ்நாட்டிற்காக 31,000 கோடி ரூபாய் அளவிற்கு நலத்திட்டங்களை வழங்க வந்த பிரதமரிடம் ஒப்பாரி வைப்பதற்கு பதிலாக, நளினி சிதம்பரத்தின் வீட்டிற்கு தினந்தோறும் சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒப்பாரி வைக்கலாம்.


மக்களால் அடித்து விரட்டப்பட வேண்டிய கேவலமான ஆட்சி தமிழ் நாட்டில் நடந்து கொண்டுள்ளது, ஊழலிலே பிறந்து, ஊழலிலேயே வளர்ந்த கட்சி திமுக என ஹெச்.ராஜா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

தேனி பங்களாமேட்டில் பாரதிய ஜனதா கட்சியின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் பி.சி.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா மற்றும் மாநில செயலாளர் ராமஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது ஹெச்.ராஜா பேசுகையில்;- மக்களால் அடித்து விரட்டப்பட வேண்டிய கேவலமான ஆட்சி தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

இது மாதிரி மோசமான, கேவலமான, கீழ்த்தரமான ஆட்சியைப் பார்க்க முடியாது. முதலமைச்சர் முதல் அனைவரும் உளறுவாயன்களாக உள்ளனர். நீட் தேர்வை எதிர்த்து தீர்மானம் போட்டதாக முதலமைச்சர் கூறுகிறார். அந்த தீர்மானம் வெறும் வெத்துக் கடுதாசி தான். கடந்த 2010ஆம் ஆண்டு திமுக இடம் பெற்றிருந்த காங்கிரஸ் அமைச்சரவையில் தான் நீட் தேர்வு முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 2013ஆம் ஆண்டு முதல் முறையாக நீட் தேர்வும் நடத்தப்பட்டது. அப்போது ஏன்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அவருடைய அப்பா கருணாநிதியும் எதிர்க்கவில்லை. நீட் தேர்வை எதிர்த்து மத்திய அமைச்சரவையில் இருந்து விலகி இருக்கலாமே.

நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டது உச்சநீதிமன்ற தீர்ப்பால் தான். முதலமைச்சருக்கு நீட் தேர்வில் விலக்கு வேண்டுமென்றால் அவர் தட்ட வேண்டிய இடம் உச்சநீதிமன்ற கதவுகள் தான். உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடி வெற்றி பெற்றவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் தான். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதனை திசை திருப்பும் வேலையை செய்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டிற்காக 31,000 கோடி ரூபாய் அளவிற்கு நலத்திட்டங்களை வழங்க வந்த பிரதமரிடம் ஒப்பாரி வைப்பதற்கு பதிலாக, நளினி சிதம்பரத்தின் வீட்டிற்கு தினந்தோறும் சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒப்பாரி வைக்கலாம்.

ஊழலில் பிறந்து ஊழலிலேயே வளர்ந்த கட்சி திமுக. அதில் ஒரு சில ஊழல் பட்டியலை தற்போது நமது மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். திமுக குறித்து எந்த ஒரு ஆதாரமும் வெளியிடத் தேவையில்லை. ஏனென்றால் திமுக என்றாலே ஊழல் கட்சி என்று சாதாரண மக்கள் கூட தெரியும். சர்க்காரியா கமிஷன் கூறியது போல அவர்கள் விஞ்ஞான ரீதியாக செய்யக் கூடியவர்கள். ஊழலிலே பிறந்து ஊழலிலேயே வளர்ந்தவன் தான் திமுககாரன். பொங்கல் பரிசு தொகுப்பு என்ற பெயரில் மிகப்பெரிய ஊழல் செய்து விட்டார்கள். மகளிருக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்குகிறோம் என்று கூறி ஏமாற்றி விட்டார்கள்.தமிழர்களை குடிகாரர்கள் ஆக்கியதே திமுகவின் சாதனை என ஹெச்.ராஜா ஆவேசமாக கூறியுள்ளார்.

click me!