வரும் 23ம் தேதி கூடுகிறது திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம்... பொதுச்செயலாளர் அறிவிப்பு..!

Published : Nov 16, 2020, 02:51 PM IST
வரும் 23ம் தேதி கூடுகிறது திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம்... பொதுச்செயலாளர் அறிவிப்பு..!

சுருக்கம்

நவம்பர் 23-ம் தேதி திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் அக்கட்சியில் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 23-ம் தேதி திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் அக்கட்சியில் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வருகிற 23/11/2020 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெறும்.

இதில், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ஜல்லிக்கட்டு வீரர்கள், காளைகளுக்கு ஜாக்பாட்... இபிஎஸ் அளித்த தேர்தல் வாக்குறுதி..!
3வது வரிசையில் தள்ளப்பட்ட ராகுல் காந்தி... கொதித்தெழுந்த காங்கிரஸ்.. இதுதான் ஜனநாயகமா?