கொரோனாவை திமுக சிறப்பாக கையாண்டது.. ஸ்டாலினை புகழ்ந்த அன்புமணி.. கையோடு வைத்த முக்கிய கோரிக்கை.!

By vinoth kumarFirst Published Jun 28, 2021, 1:50 PM IST
Highlights

வன்னியர் இட ஒதுக்கீடு போராட்ட வழக்கை திமுக அரசு தரும்ப பெற வேண்டும். பஞ்சமி நிலம் தொடர்பாக திருமாவளவனுக்கு முன்பே ராமதாஸ் போராடி நிலத்தை மீட்டு கொடுத்துள்ளார் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

வன்னியர் இட ஒதுக்கீடு போராட்ட வழக்கை திமுக அரசு தரும்ப பெற வேண்டும். பஞ்சமி நிலம் தொடர்பாக திருமாவளவனுக்கு முன்பே ராமதாஸ் போராடி நிலத்தை மீட்டு கொடுத்துள்ளார் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார் 

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் வேளாண்மைக்கான நிழல் நிதி அறிக்கை வெளியிடப்பட்டு தமிழக அரசுக்கு வழங்கப்படுகிறது. அந்தவகையில் 14வது ஆண்டாக,  47, 750 கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண் நிழல் நிதி அறிக்கையை வெளியிட்டு கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் காணொலி முறையில் உரையற்றினர்.

அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ்;- வேளாண் விளை பொருட்களை பாதுகாக்க குளிர் பதன கிடங்குகளை வட்டம் தோறும் அமைப்போம். 100 ஐஏஎஸ், அரசு அதிகாரிகளின் மூலம் ஆட்சியாளர்கள் தயாரிக்கும் அறிக்கையை பாமக தயாரித்துள்ளது. 47,750 கோடி ரூபாய் மதிப்பில் எங்களது இந்த பட்ஜெட் போடப்பட்டுள்ளது. மணல் குவாரிகள் அனைத்தையும் மூட வேண்டும். எம்-சாண்ட் , மணல் ஏற்றுமதி மூலம் மணல் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். தென் மாவட்டங்களில் அதிகம் உள்ள சீமக் கருவேலத்தை அகற்றி , யூகலிப்டஸ் மரங்களை தடுக்க வேண்டும். பனை மர வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும். 5 வேளாண் அமைச்சர் நியமிக்கப்பட வேண்டும். அடுத்த 5 ஆண்டுக்குள் தமிழகத்தில் 300 கோடி மரங்களை நட வேண்டும்.

கால நிலை மாற்றத்தால் கொரோனா உருமாறி வருகிறது. பல ஆண்டுகளாகவே கொரோனா இருக்கிறது. அது காலநிலையால் உருமாறி வருகிறது. மது விலக்கு போராட்டத்தை பாமக பல ஆண்டுகளாக நடத்தி வந்த நிலையில் அனைத்து கட்சிகளும் இன்று ஏற்றுள்ளன. வேளாண் தனி நிதி அறிக்கை தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கப்பட வேண்டியது. இந்த அறிவிப்பு வெளிவர காரணமாக இருந்தவர் ராமதாஸ்.

எங்களது அறிக்கையை முதலமைச்சரிடம் கட்சித் தலைவர் ஜி.கே.மணி வழங்குவார். அதிமுக கூட்டணியில் சேரும் முன்பு 10 கோரிக்கையை பாமக சார்பில் முன் வைத்தோம். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல கோரிக்கையை தமிழக அரசு ஏற்று அறிவிப்பை வெளியி்ட்டது. அரியலூர் மாவட்டத்தையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பட்டியலில் இணைக்க வேண்டும்.பாமகவின் பல கோரிக்கையை அதிமுக நிறைவேற்றியது.

புதிய அரசு பொறுப்பேற்று 2 மாதங்கள் ஆன நிலையில் , கொரோனாவை  தமிழக அரசு சரியான முறையில் கையாண்டுள்ளது. கொரோனா தீவிரமாக காரணம் தேர்தல்தான் .தேர்தலுக்கு பிந்தைய இடைக்கால அரசின் காலத்தில் கொரோனா தீவிரமாக பரவியது. கட்சி வேறுபாடு இன்றி நல்ல திட்டங்களை பாரட்டவே செய்வோம். வன்னியர் இட ஒதுக்கீடு போராட்ட வழக்கை திமுக அரசு தரும்ப பெற வேண்டும். பஞ்சமி நிலம் தொடர்பாக திருமாவளவனுக்கு முன்பே ராமதாஸ் போராடி நிலத்தை மீட்டு கொடுத்துள்ளார் என்றார்.

click me!