கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்துக்கு திமுக அரசே காரணம்.. ரூ.1 கோடி இழப்பீடு கொடுங்க.. இபிஎஸ்..!

Published : Nov 15, 2022, 12:56 PM IST
கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்துக்கு திமுக அரசே காரணம்.. ரூ.1 கோடி இழப்பீடு கொடுங்க.. இபிஎஸ்..!

சுருக்கம்

கால்பந்து வீராங்கணை பிரியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி.தினகரன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கூறியுள்ளார். 

கால்பந்து வீராங்கணை பிரியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி.தினகரன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கூறியுள்ளார். 

சென்னை வியாசர்பாடியை பிரியா (17). சிறு வயது முதலே முதலே கால்பந்தாட்டத்தில் அதிக நாட்டம் கொண்டவர். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பிரியா, சென்னை ராணிமேரி கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வருகிறார். கால்பந்து விளையாட்டில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் கால்பந்து பயிற்சியின் போது பிரியாவின் வலது காலில் தடைப்பிடிப்பு ஏற்பட்டதற்காக கொளத்தூரில் உள்ள பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு அவரது வலது கால் அகற்றப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு குறித்து அரசியல் தலைவர்கள் கருத்துக்களை பததிவிட்டுள்ளனர். 

எடப்பாடி பழனிசாமி

இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த கால்பந்து வீராங்கணை பிரியா மரணத்திற்கு காரணமாக இந்த திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன், இழைக்கப்பட்ட அநீதிக்கு பொறுப்பேற்று இவ்வரசு பிரியா குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

கால்பந்து வீராங்கணை பிரியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக விளையாட்டு வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

டிடிவி.தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் இளம் கால்பந்து வீராங்கனை செல்வி.பிரியா மரணமடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்துவதோடு உயிரிழந்த வீராங்கனையின் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இத்தகைய மன்னிக்க முடியாத தவறுகள் எதிர்காலத்தில் நிகழாதவாறு தடுப்பதற்குரிய நடவடிக்கைகளையும் அரசு எடுத்திட வேண்டும் முதல்வருக்கு டிடிவி.தினகரன் கோரிக்கை வைத்துள்ளார். 

அன்புமணி ராமதாஸ்

இதுதொடர்பாக பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- சென்னை கொளத்தூர் அரசு மருத்துவமனையில் மூட்டு சவ்வு கிழிந்ததற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட  கால்பந்து வீராங்கனையும், கல்லூரி மாணவியுமான பிரியா அடுத்தடுத்து ஏற்பட்ட உடல் நல பாதிப்பால் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. விளையாட்டு வீரர்கள்/ வீராங்கனைகள் நாட்டின் சொத்துகள். அவர்கள் போற்றி பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். பிரியாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்கப்பட வேண்டும். மருத்துவர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.10 லட்சம் இழப்பீடு போதுமானதல்ல...    அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஈரோட்டில் செம்ம மாஸ் காட்டும் செங்கோட்டையன்..! மாநாட்டை மிரட்டி காட்டப் போவதாக ஆவேசம்
234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..