திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்..!

By Manikandan S R S  |  First Published Feb 27, 2020, 11:40 AM IST

அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருக்கும் நிலையில் நேற்று இரவு முதல் அன்பழகன் கண்திறக்கவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கோமா நிலைக்கு சென்று விட்ட அன்பழகன் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


திமுக பொதுச்செயலாளராக இருந்து வருபவர் பேராசிரியர் க.அன்பழகன். 98 வயதான அவர் தற்போது வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். திமுக மூத்த தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பிறகு அன்பழகன் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். வயது மூப்பு காரணமாக அவருக்கு அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படுகிறது. இதற்காக மருத்துவ சிகிச்சைகள் அவருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக இரவு 8 மணியளவில் அன்பழகனுக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

Tap to resize

Latest Videos

இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அன்பழகன் உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளித்தனர். திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் அறிந்ததும் திமுக தலைவர் ஸ்டாலின், மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு அன்பழகனுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசித்தார்.  தொடர்ந்து இரண்டு நாட்களாக மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அன்பழகன் இருந்து வருகிறார். 

அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருக்கும் நிலையில் நேற்று இரவு முதல் அன்பழகன் கண்திறக்கவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கோமா நிலைக்கு சென்று விட்ட அன்பழகன் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அன்பழகன் உடல்நிலை மோசமானதை அறிந்து திமுக முன்னணி நிர்வாகிகள் அப்பல்லோ, மருத்துவமனையில் திரண்டு வருகின்றனர். தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று பார்த்து உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் விசாரித்தனர்.

click me!