அடேங்கப்பா… இவ்வளவா..? தேர்தல் செலவில் திமுகதான் டாப்…

By manimegalai aFirst Published Oct 4, 2021, 7:16 PM IST
Highlights

சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் செலவு செய்த கட்சிகளில் திமுக தான் முதலிடம் பிடித்தது.

சென்னை:  சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் செலவு செய்த கட்சிகளில் திமுக தான் முதலிடம் பிடித்தது.

தமிழகத்தில் அண்மையில் சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்தது. ஸ்டாலின் தலைமையிலான திமுக பெரும்பான்மையுடன் வென்று ஸ்டாலின் முதல் முறையாக முதலமைச்சராக அரியணை ஏறினார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம் என அனைத்து கட்சிகளுமே பணத்தை செலவுக்காக அள்ளி தெளித்தன. தனிப்பட்ட முறையில் வேட்பாளர்களும் பிரச்சாரத்தில் இறங்கி ரவுண்டு கட்டினர்.

இந் நிலையில் சட்டசபை தேர்தலில் எந்த கட்சி எத்தனை ரூபாய் செலவு செய்துள்ளது என்ற விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. இதில் திமுக தான் டாப்பாக இடம்பெற்றுள்ளது.

திமுக மொத்தம் 114 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக அதிமுக 57.33 கோடி ரூபாயும், பாமக 30 லட்சமும் செலவு செய்துள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 84.93 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறது.

கட்சிகளில் திமுக தான் சட்டசபை தேர்தலில் 114 கோடி ரூபாய் செலவு செய்து இருக்கிறது. கட்சிகளின் கோடிக்கணக்கான தேர்தல் செலவுகளை கண்டு வெகுமக்களுக்கு மயக்கம் வராத குறைதான்…!

click me!