தேர்தல் 'சீட்' தகராறு.. படுகொலை செய்யப்பட்ட 'திமுக' வட்ட செயலாளர்.. தொடரும் கொலைகள்..

Published : Feb 02, 2022, 06:01 AM IST
தேர்தல் 'சீட்' தகராறு.. படுகொலை செய்யப்பட்ட 'திமுக' வட்ட செயலாளர்.. தொடரும் கொலைகள்..

சுருக்கம்

சென்னை மடிப்பாக்கத்தில் திமுக வட்ட செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மடிப்பாக்கம் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர் செல்வம். இவர் அப்பகுதியின் திமுக வட்டச் செயலாளராகவும் உள்ளார். விரைவில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 188ஆவது வட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக இவர் அறிவிக்கப்பட்டிருந்தார்.

இதர வார்டுகளில் சீட் வழங்குவதில், செல்வம் தலையீடு இருந்துள்ளது. இவர், நேற்று இரவு மடிப்பாக்கம் ராஜாஜி நகரில் உள்ள கட்சி அலுவலகம் முன் நின்றிருந்த போது, இவருக்கு சால்வை அணிவிப்பது போல வந்த ஆறு பேர் கும்பல், சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. 

இதில் பலத்த காயமடைந்த செல்வம், அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். இந்தச் சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இது படுகொலை தொழில் போட்டியால் நடத்தப்பட்டதா அல்லது அரசியல் காரணங்களாக நடத்தப்பட்டதா என்பது குறித்து போலீசார் தங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

கோஷ்டி பிரச்சனை காரணமாக திமுகவினரால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் திருநெல்வேலி மாநகர 38வது வார்டு திமுக செயலாளராக உள்ள பொன்னு தாஸ் என்ற அபே மணி இரவு 11 மணியளவில் பாளையங்கோட்டை போலீஸ் நிலையம் அருகிலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!