இப்போ எந்த முகத்தை வைச்சுக்கிட்டு வந்தீங்க.? பொங்கல் பரிசு வழங்க திமுகவினர் போட்டி..!

Published : Jan 04, 2021, 01:11 PM IST
இப்போ எந்த முகத்தை வைச்சுக்கிட்டு வந்தீங்க.? பொங்கல் பரிசு வழங்க திமுகவினர் போட்டி..!

சுருக்கம்

பொங்கல் பரிசு வழங்குவதில் அரசாங்க அதிகாரிகளோடு போட்டிபோடும் திமுக தலைவர்கள், இப்போது என்ன சொல்வர் ஸ்டாலின்?

தமிழக அரசு வழங்கும் 2,500 ரூபாய் ரொக்கம் மற்றும் பரிசு பொருட்களை அரசு ஊழியர்கள் தான்  வழங்கவேண்டும், அதிமுகவினர் யாரும் பரிசு பொருள் கொடுக்கும் பணியில் ஈடுபடக்கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியது மட்டும் இல்லாமல், சென்னை உயர்நீதிமன்றதையும் நாடியது திமுக. ஒவ்வொரு கிராம சபை கூட்டத்திலும் இதை ஸ்டாலின் பேசாத நாளே இல்லை.

இந்நிலையில், சில இடங்களில் திமுகவினரே அரசின் பரிசு பொருட்களை மக்களுக்கு வழங்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. முன்னாள் திமுக அமைச்சர் தா.மோ. அன்பரசு மௌலிவாக்கத்தில் இருக்கும் ஒரு பொது விநியோக ரேஷன் கடை ஒன்றில் சிரித்து கொண்டே பொது மக்களுக்கு தமிழிக அரசு வழங்கும் பரிசு மற்றும் ரொக்கத்தை வழங்கிய காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஆளும் கட்சி காரர்கள் யாரும் பரிசு பொருட்களை வழங்க கூடாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறிய நிலையில், முன்னாள் திமுக அமைச்சரே இப்படி ஒரு காரியத்தில் ஈடுபட்டுள்ளது  திமுகவினருக்கு முகசுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.  இப்போது என்ன சொல்ல போகிறார் ஸ்டாலின் என்று தெரியவில்லை, மேலும் தாம்பரம் மற்றும் சேலையூர் பகுதிகளில் திமுக சார்பாக அங்கும் இங்கும் திமுக பரிசு பொருட்களை வழங்குவது போல கட்டவுட்களும் வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசு வழங்குவதில் அரசாங்க அதிகாரிகளோடு போட்டிபோடும் திமுக தலைவர்கள், இப்போது என்ன சொல்வர் ஸ்டாலின்?

PREV
click me!

Recommended Stories

Jana Nayagan: ஜனநாயகன் படத்தை சரசரவென வெட்டித்தள்ளிய சென்சார்.?! நீக்கப்பட்ட 12 முக்கிய காட்சிகள் என்னென்ன?
Kollur Temple: விஜய்யைத் தொடர்ந்து கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு படையெடுத்த மற்றொரு முதல்வர்!