ஆமாய்யா நான் சர்வாதிகாரி ஆகிட்டேன்!!! கும்கி கொம்பன் ஸ்டைலில் தி.மு.க. ஸ்டாலின்

By vinoth kumarFirst Published Oct 19, 2018, 9:32 AM IST
Highlights

’ஜெயலலிதா போல் நம் கட்சியிலும் சர்வாதிகாரம் வேண்டும்!’ என்று கருணாநிதி இருந்த காலத்தில் கேட்டுக் கொண்டே இருந்தார் ஸ்டாலின். அவர் மறைவுக்குப் பின் தலைவராகியிருக்கும் ஸ்டாலின், தான் சர்வாதிகாரியாகவும் ஆகிவிட்டேன்! என்பதை அதிரடியாய் நிரூபித்திருக்கும் விஷயம்தான் ‘டி.கே.எஸ்.இளங்கோவன் பதவி பறிப்பு’. டோட்டல் தி.மு.க.வும் ஆடிக் கிடக்கிறது இந்த அதிரடியில்.

’ஜெயலலிதா போல் நம் கட்சியிலும் சர்வாதிகாரம் வேண்டும்!’ என்று கருணாநிதி இருந்த காலத்தில் கேட்டுக் கொண்டே இருந்தார் ஸ்டாலின். அவர் மறைவுக்குப் பின் தலைவராகியிருக்கும் ஸ்டாலின், தான் சர்வாதிகாரியாகவும் ஆகிவிட்டேன்! என்பதை அதிரடியாய் நிரூபித்திருக்கும் விஷயம்தான் ‘டி.கே.எஸ்.இளங்கோவன் பதவி பறிப்பு’. டோட்டல் தி.மு.க.வும் ஆடிக் கிடக்கிறது இந்த அதிரடியில். 

காரணம், அறிவாலயத்தில் நடக்கும் கழகம் சார்ந்த அத்தனை நிகழ்வுகளிலும் ஒரு கையில் நிகழ்ச்சி நிரல் பேப்பர், மறு கையில் மைக் என்று ஓடியோடி பணியாற்றியவர். அவ்வளவு பொறுப்பான மனிதர், கருணாநிதியின் சிலை திறப்பு விழா பற்றிய பேட்டியில் ‘சோனியா காந்தி வருகிறார், அ.தி.மு.க.வை அழைக்க மாட்டோம்!’ என்றெல்லாம் தன்னிச்சையாக அறிவித்தது ஸ்டாலினை சூடேற்றிவிட்டது. போதாக்குறைக்கு துரைமுருகன் உள்ளிட்டோரும் ‘எல்லாவற்றையும் அவரே சொல்லிவிட்டால் பிறகு தலைவர் என்கிற பதவி எதற்கு?’ எனும் ரீதியில் நாசூக்காக வார்த்தைகளைக் கிள்ளிப் போட்டனர். விளைவு, கருணாநிதி போல் விளக்கம் கேட்டு மெகோ அனுப்பாமல், ஜெயலலிதா போல் டிஸ்மிஸ் ஆர்டரை அடித்துவிட்டார் ஸ்டாலின்.

 

‘கொம்பன் தான் இறங்கிட்டேங்கிறதை சொல்லிட்டு போயிருக்கான்!’ எனும் கும்கி பட டயலாக் போல் ’நான் சர்வாதிகாரி ஆயிட்டேன். இளங்கோவன் கதிதான் இனி எல்லாருக்கும்! அப்படின்னு தலைவர் சொல்லாமல் சொல்ல்லியிருக்கார்.’ என்கிறார்கள் தி.மு.க.வின் சீனியர் தலைகள். நடுநிலை தி.மு.க.வினரோ ”உண்மைதான், கழகத்தின் மாண்பும், அது இருக்கின்ற இக்கட்டான சூழலும் புரியாமல் சில முக்கிய நிர்வாகிகள் ஓவராக ஆடிக் கொண்டு உள்ளனர். தன் நெருங்கிய வட்டத்தில் அவர்கள் இருப்பதால் ஸ்டாலினால் உடனடியாக ரியாக்ட் செய்ய முடியவில்லை. 

கட்சியில் எவருக்கும் ரெட்டை பதவி கூடாது! என்று பொதுச்செயலாலர் அன்பழகன் அறிவித்து பல காலமாகிவிட்டது. ஆனால் இன்னமும்  பொன்முடி, வேலு போன்றோர் இரட்டைப் பதவியுடன் சுற்றுகின்றனர். அவர்களை தாமாக முன்வந்து ஒரு பதவியை துறக்க வைக்க ஸ்டாலின் கொடுத்த ஷாக் இனிமாதான் இந்த அதிரடி நடவடிக்கை. இதிலும் அவர்கள் மாறவில்லையென்றால் வெளிப்படையாகவே வேட்டு வைக்க ஸ்டாலின் ரெடி. அதைத்தான் சொல்லிக் காட்டியிருக்கிறார் இளங்கோவனை வீழ்த்தியது மூலமாக. 

இளங்கோவன் மீது ஸ்டாலினுக்கு பெரும் கோபம் இல்லை, ஆனால் நூல் விலகி சென்றால் வெட்டிவிடுவேன் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ளவே இந்த நடவடிக்கையை முன்னுதாரணமாக்கி இருக்கிறார்.” என்கிறார்கள். இருக்கட்டும். இது ஒரு புறமிருக்க இளங்கோவன் வகித்த தி.மு.க. செய்தித் தொடர்பாளர் பதவிக்கு கே.எஸ்.ராதகிருஷ்ணன், ரகுமான்கான், திருச்சி சிவா என பெரிய போட்டி நடக்கிறது.

click me!