உரிமைக்குழுவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது திமுக...!!! - உயர்நீதிமன்றத்தில் முறையீடு... 

 
Published : Aug 30, 2017, 11:48 AM ISTUpdated : Sep 19, 2018, 01:07 AM IST
உரிமைக்குழுவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது திமுக...!!! - உயர்நீதிமன்றத்தில் முறையீடு... 

சுருக்கம்

dmk case file to high court about rights commision notice

பேரவைக்கு குட்கா எடுத்து வந்த விவகாரத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்களுக்கு  உரிமை குழு நோட்டிஸ் அனுப்பியதை எதிர்த்து திமுக உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. 

சில நாட்களுக்கு முன்பு பான், குட்கா  அதிபர்களிடம்  அமைச்சர் விஜய பாஸ்கர் , ஐபிஎஸ் அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன் மற்றும் ஜார்ஜ் உள்ளிடோர் லஞ்சம் வாங்கியதாக ஊடகங்களில் ஆதாரத்துடன் வெளியாகியது.

ஆனால் தமிழக அரசு இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைதொடர்ந்து இதுகுறித்து நீதிமன்றங்களில் எதிர்கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன.

இதைதொடர்ந்து சென்னையில் எங்கெல்லாம் குட்கா விற்கப்படுகிறது என ஆய்வு செய்து புகைப்படங்களுடன் சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளிப்படுத்தினார்.

மேலும் பெண்கள் முதல் குழந்தைகள் வரை குட்கா விற்க உபயோகப்படுத்தப்படுகிறார்கள் என தெரிவித்தார்.

இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தடை செய்யப்பட்ட குட்காவை எதிர்கட்சி தலைவர் சட்டப்பேரவைக்கே எடுத்து வந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இது அவர்களுக்கு எங்கே கிடைத்தது என கேள்வி எழுப்பினார்.

மேலும் இதுகுறித்து பேசிய சபாநாயகர் தனபால் எதிர்கட்சிகளின் செயலை உயர்மட்ட விசாரணைக்கு அனுப்புவோம் என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், இதுகுறித்து உயர்மட்ட குழு விசாரணை பொள்ளாட்சி ஜெயராமன் தலைமையில்  நடைபெற்றது. இதில் வீடியோக்களை ஆய்வு செய்த உரிமை குழு ஸ்டாலின் உட்பட 21 திமுக எம்.எல்.ஏக்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. 

இதையடுத்து உரிமைக்குழு நோட்டிஸை சட்டப்படி சந்திப்போம் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், சட்டமன்ற உரிமைக்குழு நோட்டீஸுக்கு எதிராக ஐகோர்ட்டில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. செப்.7-ம் தேதி இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!