பெரம்பலூர் வேண்டாம் என மறுத்த வேந்தர்… வற்புறுத்தி நிற்க வைத்த ஸ்டாலின் !!

Published : Mar 12, 2019, 10:26 PM IST
பெரம்பலூர் வேண்டாம் என மறுத்த வேந்தர்… வற்புறுத்தி நிற்க வைத்த ஸ்டாலின் !!

சுருக்கம்

கேட்ட தொகுதி கிடைக்காததால்  இந்திய ஜனநாயக கட்சி தேர்தலில் இருந்து விலகிக் கொள்வதாக முடிவெடுத்திருந்த நிலையில் தற்போது பெரம்பலூர்  தொகுதியில் அக்கட்சி தேர்தல் வேலைகளைத் தொடங்கியுள்ளது.  

திமுக தலைமையிலான கூட்டணியில் பாரி வேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சி இணைந்தது. அந்த கட்சிக்கு கள்ளக்குறிச்சி தொகுதி ஒதுக்குவதாக கூறப்பட்டது. ஆனால் அந்த தொகுதியை முன்னாள் அமைச்சர் பொன்முடி தனது மகனுக்காக பேசி வாங்கிவிட்டார். 

இதனால் அதிருப்தி அடைந்த பாரி வேந்தர் தேர்தலில் இருந்து விலகிவிடலாம் என முடிவு செய்தார். பெரம்பலூரில் நிற்க  பாரிவேந்தர் தயங்கவே, ‘நிற்பதென்றால் பெரம்பலூரில் நில்லுங்கள். இல்லையென்றால் கூட்டணியே வேண்டாம்’ என்ற அளவுக்கு திமுக தலைமையிடம் இருந்து வார்த்தைகள் வந்திருக்கின்றன.

இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது . அதன் அடிப்படையில் அக்கட்சி தனது முதல் கட்ட வேலைகளை பெரம்பலூரில் தொடங்கியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

Tamil Nadu CM Vijay Assembly Speech: தமிழ்நாட்டிற்காக எந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்வேன்.! சட்டசபையில் அடித்து பேசிய முதல்வர் விஜய்.!
kalaignar karunanidhi: கலைஞரின் வார்த்தை விளையாட்டு.! சொற்களை வீசி சிரிக்க வைத்த வசீகரன்.! பாமர மக்களையும் ரசிக்க வைத்த அல்டிமேட் அரசியல் பேச்சு.!