திமுக கூட்டணி பட்டியல் ரெடி !! எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதி ?

By Selvanayagam PFirst Published Feb 26, 2019, 9:30 PM IST
Highlights

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அதிகாரப்பூர்வ பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில் கூட்டணியை இறுதிப்படுத்தும் முனைப்பில் திமுக, அதிமுக என இரண்டுக்கட்சிகளும் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. 

அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது  குறித்து இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில் அங்கு தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.


ஆனால் திமுக கூட்டணி கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டது. திமுக கூட்டணியில் தோழமைக் கட்சிகளாக இருக்கும் மதிமுக, இடதுசாரிகள், விசிக, முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் கூட்டணியில் இருக்க பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி உட்பட புதிதாக சில கட்சிகளும் கூட்டணியில் இணைய உள்ளதாக தெரிகிறது.

திமுக கூட்டணியில் மதிமுக 3 தொகுதிகள் வரை கேட்டு அடம் பிடிக்கிறது. இடதுசாரி கட்சிகளும், விசிகவும்  தலா 2 தொகுதிகள் கேட்டதாக தெரிகிறது. ஆனால் இதிலும்ட இழுபறி நீடிப்பதாக கூறபட்டது. அதே நேரத்தில்  தொகுதி பற்றிய பேச்சு வார்த்தைக்கு முன் யார் யாருக்கு எத்தனை தொகுதி என திமுக கூட்டணியில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஏற்கெனவே காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கியது போக மீதமுள்ள 30 தொகுதிகளில் மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக, முஸ்லீம் லீக், கொ.ம.தே. கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்படுகிறது. மதிமுகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இருக்கும் கூட்டணிக்கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி என்கிற அடிப்படையில் 6 தொகுதிகள், காங்கிரஸ் 10 தொகுதிகள் போக புதிதாக இணையும் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் மனித நேய மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக அணியில் உள்ள பாரிவேந்தர் திமுக அணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படுகிறது.

தேமுதிக திமுக அணிக்கு வந்தால் 2 தொகுதிகளை கொடுப்பது எனவும் 10 தொகுதிகள் போக 20 தொகுதிகளில் திமுக நிற்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால்  தேமுதிக வராவிட்டால் 22 தொகுதிகளில் திமுகவே நிற்பது என  முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

click me!