சபாநாயகர் தனபால்  முதலமைச்சராக வந்தால் பிரச்சனை ஒழியும்  !!  திரும்பவும் வலியுறுத்தும் திவாகரன் !!!

 
Published : Aug 31, 2017, 03:24 PM ISTUpdated : Sep 19, 2018, 01:07 AM IST
சபாநாயகர் தனபால்  முதலமைச்சராக வந்தால் பிரச்சனை ஒழியும்  !!  திரும்பவும் வலியுறுத்தும் திவாகரன் !!!

சுருக்கம்

Divakaran press meet in Erode

சபாநாயகர் தனபால்  முதலமைச்சராக வந்தால் பிரச்சனை ஒழியும்  !!  திரும்பவும் வலியுறுத்தும் திவாகரன் !!!

48 எம்எல்ஏக்கள் தங்களுக்கு ஆதரவாக உள்ளதாகவும், அதில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்களும் உள்ளனர் என்று சசிகலாவின் திவாகரன் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்  அணிகள் இணைந்ததையடுத்து சசிகலாவை கட்சியில் இருந்தும், பதவியில் இருந்தும் விலக்கி வைப்போம் என தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர்,  தமிழக அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்தனர்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி சட்டப் பேரவையில் பெரும்பான்மை இழந்துள்ளார்.

இந்நிலையில் ஈரோட்டில் நடந்த அ.தி. மு.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த சசிகலாவின் தம்பி திவாகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது தங்களுக்கு  48 எம்.எல்.ஏ.க் கள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர் என்றும் . கொங்கு மண்டலத்தை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் எங்களுக்கு தார்மீக ஆதரவு தெரிவித்து உள்ளனர் என்றும் தெரிவித்தார்..

மின் துறை அமைச்சர் தங்கமணி மின் இணைப்பு வழங்குவதற்காக தட்கல் முறையை அமல்படுத்தி ஊழல் செய்து வருவதாக தெரிவித்தார்.

தமிழகத்தை மின் மிகை மாநிலம் என்று தங்கமணி கூறிதாகவும் ஆனால் இங்கு மின்  ஆனால் மின்சாரமே இல்லை என்று குற்றம்சாட்டினார்

எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்டபட 5 அமைச்சர்கள் ஊழலில் திளைத்திருக்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி மூழ்கிப்போன கப்பலின் கேப்டன் போல உள்ளார் என்றும் திவாகரன் தெரிவித்துள்ளார்.

இப்பிரச்சனைகளுக்கெல்லாம் ஒரே முடிவு, சபாநாயகர் தனபால் முதலமைச்சராக வேண்டும் என்றும் திவாகரன் அதிரடியாக தெரிவித்தார்.

சபாநாயகர் தனபால் முதல்-அமைச்சராக வர வேண்டும். அப்போதுதான் கட்சியிலும், ஆட்சியிலும் உள்ள பிரச்சினை ஒழியும்.என்று  திவாகரன் கூறினார்.

 

 

 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!