
பன்னீர் செல்வத்திற்கு பதவி இல்லையென்றால் தூக்கம் வராது என்றும் ஆக்ஸிஜன் இல்லாதது போன்று ஃபீல் பன்னுவார் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
எடப்பாடியும் டிடிவி தினகரனும் கைகோர்த்திருந்த சமயம் பன்னீர்செல்வம் ஊழல் ஆட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது எனவும் இவற்றை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்து நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவுக்கு எதிராக வாக்களித்தார்.
ஆனால் எடப்பாடி நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பி, முதலமைச்சராக அமர்ந்த பின்பு அவரது தரப்பில் இருந்த டிடிவியே நாற்காலிக்கு சண்டை போட ஆரம்பித்தார்.
இதனால் விரக்தி அடைந்த எடப்பாடி தெரியாத சாத்தானை விட தெரிந்த பிசாசே மேல் என்ற பழமொழிக்கேற்ப செயல்பட ஆரம்பித்தார்.
அதாவது டிடிவி தினகரனை ஓரங்கட்டிவிட்டு பன்னீர் செல்வத்திற்கு ஒரு பதவியை கொடுத்து கையில் வைத்து கொள்ள தயாராகினார்.
அதன்படி பன்னீருக்கு துணை முதல்வர் பதவியை கொடுத்து இரு அணிகளை ஒன்றிணைத்தார். டிடிவி தினகரனை அமைச்சர்கள் உதவியோடு ஒதுக்கினார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் பன்னீர் செல்வத்திற்கு பதவி இல்லையென்றால் தூக்கம் வராது என்றும் ஆக்ஸிஜன் இல்லாதது போன்று ஃபீல் பன்னுவார் என்றும் தெரிவித்தார்.
மேலும், அவரை ஜெயலலிதாவிடம் எப்போது அறிமுகம் செய்து வைத்தோனோ அப்பொது இருந்து அவரை பற்றி நன்றாக தெரியும் எனவும், தர்ம யுத்தம் என்று கூறி தற்போது பதவியை வாங்கி கொண்டு கமுக்கமாக அமர்ந்திருக்கிறார் எனவும் குறிப்பிட்டார்.
முதல்வர் பதவியில் இருந்து டி ப்ரொமோட் ஆகி துணை முதல்வர் பதவிக்கு வந்துள்ளார் பன்னீர் என்றும் குட்டி கதை மூலம் விமர்சித்தார்.