தவறு செய்தால் பணிநீக்கம்... அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!

Published : May 10, 2021, 06:35 PM IST
தவறு செய்தால் பணிநீக்கம்... அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!

சுருக்கம்

அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கள் துறையில் ஏதேனும் தவறு செய்தால், உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள். அமைச்சர்களின் உதவியாளர்கள் நியமனம் உள்பட அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். தொகுதிக்குள் ஏதேனும் பிரச்னை இருந்தால் நேரடியாக தன்னிடம் முறையிடவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். 

தங்கள் துறையின் நியமனங்கள் மற்றும் பணி மாறுதல்கள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற வேண்டும்.  பல எம்.எல்.ஏ.,க்களுக்கு வாய்ப்பில்லாத நிலையில், அமைச்சர்களாக இருப்போர் பொறுப்புடன் செயல்பட வேண்டும். ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லாத நிலையில், மிகச் சிறப்பாக செயல்பட்டு, அவர்களது அங்கீகாரத்தைப் பெற வேண்டும். அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த புள்ளி விவரங்களை நன்கு அறிந்து வைத்துக் கொள்ளவும், முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?