சிவகங்கை அருகே 16ம் நூற்றாண்டு நாயக்கர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு..!

By T BalamurukanFirst Published Aug 24, 2020, 10:39 PM IST
Highlights

சிவகங்கை அருகே நாயக்கா் கால கல்வெட்டு கண்டெடுப்பு சக்கந்தியில் 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நாயக்கா் கால கல்வெட்டினை தொல்லியலாளா்கள் கண்டெடுத்துள்ளனா்.
 

சிவகங்கை அருகே நாயக்கா் கால கல்வெட்டு கண்டெடுப்பு சக்கந்தியில் 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நாயக்கா் கால கல்வெட்டினை தொல்லியலாளா்கள் கண்டெடுத்துள்ளனா்.

சிவகங்கை மாவட்டம், சக்கந்தியில் 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நாயக்கா் கால கல்வெட்டினை தொல்லியலாளா்கள் கண்டெடுத்துள்ளனா்.இக்கல்வெட்டு குறித்து தொல்லியல் ஆய்வாளா் கொல்லங்குடி கா. காளிராசா  சக்கந்தியில் பழைமையான எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இருப்பதாக அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சொன்னதன் பேரில் அந்த கிராமத்திற்கு காளிராசா குழு சென்றது.

  16 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நாயக்கா் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் பெருமாளுக்கு இறையிலியாக வழங்கப்படும் நிலத்தின் எல்லையைக் குறிக்கும் வகையில் 4 பக்கங்களிலும் திருவாழிச் சின்னம் புடைப்பாக வடிக்கப்பட்டுள்ளது.இக்கல்வெட்டில் ‘ஸ்வஸ்திஸ்ரீ’ எனும் மங்கலச் சொல்லோடு தொடங்கி 22 வரிகள் இடம் பெற்றுள்ளன. அதில், ‘நள வருடம் தை மாதம் 30 ஆம் நாள் சுவாமி அழகருக்கு, மகாராசஸ்ரீ புண்ணியமாக விசுவன நாயக்கா், திம்மப்ப நாயக்கா் அழகருக்கு வண்டியூா் திருநாள் பொலியிட்டுக் கொடுத்த இக்கிழக்கு வலசை சக்கை கரிசம்பூா் உள்ள ஏந்தல்களும் அழகா் திருவிடையாட்டம்’ என முடிகிறது.இக்கல்வெட்டில் சிதைந்துள்ள எழுத்துக்களை உடைய வரிகள் நாயக்கா் கால அரசின் புகழ்பாடக்கூடிய மெய்கீா்த்திச் சொல்லாக இருக்கலாம்.

 இக்கிழக்கு வலசை சக்கை என்று குறிப்பிட்டு சொல்லப்படுவதால் இன்றைய சக்கந்தியையும், மேற்கு வலசை சக்கை என இன்றைய கோமாளிபட்டியையும் குறித்து இருக்கலாம். கரிசம்பூா் என்பது தற்போது கரிசம்புலி என வழங்கப்படுகிறது.மதுரை வண்டியூரில் கோயில் கொண்டுள்ள அழகருக்கு இந்த எல்லையைக் குறிக்கும் நிலப்பகுதி தானமாக வழங்கப்பட்ட செய்தியை இக்கல்வெட்டு கூறுவதாகக் கொள்ளலாம். இக்கல்வெட்டில் வரும் தமிழ் வருடம் நள ஆண்டு பொது ஆண்டில் 1556 எனக் குறிப்பிடப்படுகிறது. எனவே இக்கல்வெட்டு 16 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தவை எனலாம்.நாயக்கா் காலத்தில், மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளை 72 பாளையங்களாகப் பிரித்து ஆட்சி நடத்தினா். அவற்றுள் சக்கந்தியும் ஒன்றாகத் திகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 மேலும் இதே பகுதியில் உள்ள செங்குளத்தினுள் பழைமையான கல்வட்டம், முதுமக்கள் தாழிகள் இருந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன.இதுதவிர, பிற்காலப் பாண்டியா்களின் சிவன் கோயில் ஒன்று இருந்து அழிந்து போயிருக்கலாம். அதற்கான சான்றுகளும் கிடைக்கின்றன. சக்கந்தி கண்மாய் கரையில் நந்தி சிலை மண்ணில் புதையுண்டு உள்ளது. அதே ஊருக்குள் அரண்மனை எதிரே உள்ள பொட்டலில் கோயில் இடிபாட்டில் மிச்சப்பட்ட துண்டுக் கல்வெட்டு ஒன்றும் கிடைத்துள்ளது.அதில், செழியத்தரைய மற்றும் இன்னாயினாருக்கு என குறிப்பிடப்பட்டுள்ளது. செழியத்தரைய என்பது பாண்டியா் கால அரசு அலுவலரைக் குறிப்பதாகும். இன்னாயினாருக்கு என்பது கடவுள் பெயரைக் குறிப்பதாகும். இக்கல்வெட்டு நிலம் தானம் வழங்கிய செய்தியைச் சொல்வதாகக் கொள்ளலாம். இக்கல்வெட்டின் எழுத்து வடிவங்களின் அடிப்படையில் 13 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தவை ஆகும். 

click me!