ஜெயலலிதா இப்படித்தான் இறந்தாரா? அடுத்த பகீர் கிளப்பினார் திண்டுக்கல் சினிவாசன்...

Published : Dec 23, 2018, 09:38 AM IST
ஜெயலலிதா இப்படித்தான் இறந்தாரா? அடுத்த பகீர் கிளப்பினார் திண்டுக்கல் சினிவாசன்...

சுருக்கம்

சசிகலா கொள்ளை அடித்ததால் மன வேதனையில் ஜெயலலிதா இறந்தார் என அமைச்சர் திண்டுக்கல் சினிவாசன் பேசினார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், இடைத்தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  அமைச்சர்கள் விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "ஜெயலலிதா ஏன் சிறை சென்றார். அவருக்கு கொள்ளை அடிக்க வேண்டிய அவசியம் இல்லை. தினகரனால் தான் அவர் சிறை சென்றார்." பகீர் கிளப்பினார். 

தொடர்ந்துபி பேசிய அவர், சசிகலா கொள்ளை அடித்ததால் மன வேதனையில் ஜெயலலிதா இறந்தார் என்ற அடுத்த பகீர் கிளப்பினார்.

ஜெயலலிதா வீட்டில் வேலை பார்த்தவரின் உறவினர் தானே தினகரன். அதிமுகவில்  இருப்பவர்களை இழுக்கப்பார்க்கிறாராம் ஸ்டாலின். அனால் அது மட்டும்  முடியாது. வைகோ ஸ்டாலினை முதல்வராக ஆக்குவேன் என்கிறார் . நான் அவரிடம் பேசும் போது, ஏன்ணே... டெப்பாசிட் வாங்கும் கட்சிகூட சேரமாட்டீங்களா? என்றெல்லாம் கேட்டிருக்கிறேன் என கூறினார்.

PREV
click me!

Recommended Stories

இந்து என்பதில் திருமாவுக்கு என்ன பிரச்சனை..? ஸ்டாலின் ஆர்எஸ்எஸ்-காரராக இருக்க வேண்டும்..! ராம சீனிவாசன் அதிரடி..!
எடப்பாடி பழனிசாமி ரொம்ப நேர்மையானவர்.. திமுக அரசே சர்டிபிகேட் கொடுத்துடுச்சு..! ஆர்ப்பரிக்கும் அதிமுக..!