18 எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிபோக மு.க. ஸ்டாலினே காரணம்... புதுசா குண்டு போடும் திண்டுக்கல் சீனிவாசன்!

Published : Oct 11, 2019, 08:29 AM IST
18 எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிபோக மு.க. ஸ்டாலினே காரணம்...  புதுசா குண்டு போடும் திண்டுக்கல் சீனிவாசன்!

சுருக்கம்

சீன அதிபரை தமிழகத்துக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பிரதமர் மோடிக்கு, மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். அப்போ, அதிலிருந்து அவரும் எங்களோதான் இருக்கிறார் என்று தெரிகிறது.

மு.க. ஸ்டாலின் முதல்வராகவும், தினகரன் துணை முதல்வராகவும் ஆக வேண்டும் என்பதற்காக 18 எம்.எல்.ஏ.க்களின் வாழ்க்கையை தினகரன் கெடுத்துவிட்டார் என்று தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


17 எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிபோனதற்கு டிடிவி தினகரன்தான் காரணம். அவர்களால்தான் அவர்கள் இன்று நடுத்தெருவில் இருக்கிறார்கள். 17 எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிபோக காரணமாக இருந்த டிடிவி தினகரன் ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அமமுகவில் அதிருப்தியில் உள்ள டிடிவி புகழேந்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில் திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் புகழேந்தியின் கருத்து பற்றி கேட்கப்பட்டது.


அதற்குப் பதில் அளித்த திண்டுக்கல் சீனிவாசன், “18 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிபோனதற்கு டி.டி.வி.தினகரன் மட்டும் காரணம் அல்ல. மு.க.ஸ்டாலினும் காரணம். அவர் முதல்வராக வேண்டும்; டி.டி.வி.தினகரன் துணை முதல்வராக வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு, 18 எம்.எல்.ஏ.க்களின் வாழ்க்கையைக் கெடுத்து விட்டார்கள்.” என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் பாஜக ஆட்சிதான் நடைபெறுகிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்த கருத்து பற்றி பதில் அளித்த திண்டுக்கல் சீனிவாசன், “சீன அதிபரை தமிழகத்துக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பிரதமர் மோடிக்கு, மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். அப்போ, அதிலிருந்து அவரும் எங்களோதான் இருக்கிறார் என்று தெரிகிறது.” என்று தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை