அடேங்கப்பா!! எம்.ஜி.ஆர் இப்படித்தான் ஆட்சியை பிடித்தாரா? ஒரே மேடையில் 3 சம்பவம் பண்ணிய திண்டுக்கல் சீனிவாசன்!!

By sathish kFirst Published Feb 11, 2019, 7:59 PM IST
Highlights

சர்ச்சை நாயகன் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தற்போது தனது கட்சி  தலைவர் எம்.ஜி.ஆரை கோர்த்துவிட்டு வரசமாக்க சிக்கியிருக்கிறார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மாசத்தில் ஒரு சர்ச்சையாவது கிளம்புவார்,  விவகாரமான பேட்டிகள், எக்குத்தப்பு வார்த்தைகள் என தொடர்ந்து உளறி கொட்டிக் கொண்டே இருக்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்.  "அம்மா இட்லி சாப்பிட்டாங்க" என ஆரபித்த அவர், தொடர்ந்து 3 நாட்களுக்கு முன்னாடிதான் பிரதமர் வாஜ்பாய் அருமையான பட்ஜெட் தாக்கல் செய்தார் என்று சொல்லி இறந்த வாஜ்பாய்க்கு உயிர் கொடுத்ததும் நம்ம சீனிவாசன் தான், அடுத்ததாக  ராகுல்காந்தி கொலை செய்யப்பட்ட போது  என ஒரு முறை இல்லை, ராகுல் கொலை செய்யப்பட்டார் என்றே திரும்ப திரும்ப சொன்னார். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இப்படி சர்ச்சையை கிளப்பிவரும் சர்ச்சை நாயகன் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தற்போது தனது கட்சி  தலைவர் எம்.ஜி.ஆரை கோர்த்துவிட்டு வரசமாக்க சிக்கியிருக்கிறார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டு  பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்; 

முதலாவதாக, "ஒரு பசு மாட்டுக்கு ரூ.500 வீதம் விலையில்லா பசுமாடுகள் வழங்கப்பட்டுள்ளன" என்றார். அதாவது, பால் உற்பத்தியை பெருக்க, ஒரு பசு மாடு வீதம் 500 விலையில்லா பசுமாடுகள் அரசு தரப்பில் தரப்பட்டுள்ளதைதான் அமைச்சர் இப்படி மாற்றி சொன்னார். "ஒரு கறவை மாட்டின் விலை 500 ரூபாயா" என்று கூட்டத்தில் லேசான சலசலப்பு ஏற்பட்டது.  

அடுத்ததாக, "தமிழக பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு 28 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது எதற்காக? நம் மாநிலம் கல்வியில் சிறந்த மாநிலமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்றதும் இதைக் கேட்டதும் மேடையில்  அமர்ந்திருந்த கலெக்டர் உள்ளிட்டவர்கள் மொத்தமாக ஷாக். ஏனென்றால், பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு 28, 757 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அமைச்சர் சொல்லும் வெறும் 28 லட்சம் என சொல்றாரே அனைவருக்கும் ஒரே ஷாக்.  

மூன்றாவதாக, "எம்ஜிஆர் எப்படி ஆட்சிக்கு வந்தார் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அந்த ஆட்சிக்கு முன்னால் நடைபெற்று வந்த ஆட்சியை குறை சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தார்" என்றார்  திண்டுக்கல் சீனிவாசன். இதைக்கேட்டதும் மேடையிலிருந்தவர்கள் மட்டுமல்ல, கூடியிருந்த பொதுமக்களும் சேர்ந்து ஆடிப்போய் விட்டார்கள். அடுத்தவர்களை குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தவர் எம்ஜிஆர் என்று பொதுக்கூட்ட மேடையில், அதுவும் அமைச்சரே இப்படி  பேசியிருப்பது அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்களாம்.

click me!