மக்களவை தேர்தல் மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தினகரன் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்று அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமமுகவுக்கு தேர்தல் ஆணையம் பரிசுப் பெட்டி சின்னத்தை ஒதுக்கியது. இந்த பரிசுப் பெட்டி சின்னம் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.
மக்களவை தேர்தல் மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தினகரன் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்று அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமமுகவுக்கு தேர்தல் ஆணையம் பரிசுப் பெட்டி சின்னத்தை ஒதுக்கியது. இந்த பரிசுப் பெட்டி சின்னம் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.
டிடிவி தினகரன் ஆர்.கே. நகர் தொகுதியில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டார். இதனையடுத்து அந்த சின்னம் மிகவும் பிரபலமானது, தினகரன் மிகப்பெரிய வெற்றியும் பெற்றார். இதனையடுத்து இந்த தேர்தலிலும் அதே குக்கர் சின்னத்தை எங்களுக்கு பொதுச்சினமாக வழங்க வேண்டும் என தினகரன் தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடியது. ஆனால் தினகரனின் அமமுக பதிவு செய்யப்பட்ட கட்சி இல்லை எனவே அந்த கட்சிக்கு குக்கர் சின்னத்தை பொதுச்சின்னமாக ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக கூறியது.
இந்நிலையில் பரபரப்பாக சென்ற இந்த வழக்கில் தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் கிடையாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதே நேரத்தில் தினகரனின் அமமுக வேட்பாளர்கள் அனைவருக்கும் வேறொரு தனி சின்னத்தை பொதுசின்னமாக வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியது. மேலும் தினகரனின் வேட்பாளர்கள் சுயேட்சையாகத்தான் கருதப்படுவார்கள் என்று நீதிமன்றம் கூறியது.
இதனையடுத்து தினகரனின் அமமுக கட்சிக்கு பரிசுப் பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதை அமமுக வேட்பாளர்கள் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தேர்தல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த மகிழ்ச்சியை அமமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதை தொடர்ந்து சின்னத்தை வாக்காளர்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் முயற்சியில் டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் இறங்கியுள்ளனர். இதன் எதிரொலியாக #GiftBox #GiftPack #பரிசுப்பெட்டி போன்ற ஹேஷ்டேகுகள் இந்தியளவில் டிரெண்டிங்கில் உள்ளன. இதில் பல்லாயிரம் டிவிட்டுகள் பகிரப்பட்டது. தேர்தல் ஆணையம் சின்னத்தை அறிவித்த ஆளுங்கட்சியான அதிமுக பீதி அடைந்துள்ளது.