அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை ‘வாரிசு இல்லா தலைவர்கள்’ என கிண்டலடித்தாரா ஸ்டாலின்

By Ezhilarasan BabuFirst Published Nov 5, 2019, 6:38 PM IST
Highlights

*அரசியல் தலைவர்களின் வாரிசுகள் அரசியலில் நுழைவதில் எந்த தவறும் இல்லை. வாரிசுகளை அரசியலில் களமிறக்கிய தலைவர்கள்தான் அரசியல் இயக்கங்களை நீண்ட காலம் முன்னெடுத்துச் சென்றுள்ளனர். அதனால் வாரிசு அரசியல் தவறில்லை. அதற்காக வாரிசு இல்லாதோர் அரசியலில் சரியாக செயல்படவில்லை என்று அர்த்தமில்லை. - மு.க. ஸ்டாலின் (தி.மு.க. தலைவர்) (ஸ்டாலின் இப்படி பேசியது, அண்ணா! எம்.ஜி.ஆர்.! ஜெயலலிதா போன்றோரை ‘வாரிசு அற்றோர்’ என் கிண்டலடித்ததாக ஒரு பரபரப்பு கிளம்பியுள்ளது அரசியலரங்கில்)

*இந்த மாதமான நவம்பர் 2019 இந்திய அரசியல் வரலாற்றில் மிக மிக முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. காரணம் தேசிய அரசியலின் பல்ஸை எகிற வைக்கும் ரஃபேல் போர் விமான மேல்முறையீடு வழக்கும், தகவல் அறியும் உரிமை சட்ட திருத்தம் தொடர்பான வழக்கு, சபரிமலை கோயில் விவகாரம், ராமஜென்ம பூமி வழக்கு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்! உள்ளிட்ட கனத்த விவகாரங்கள் தொட்ர்பான வழக்குகளின் தீர்ப்பு இதில்தான் வர இருக்கிறது. -பத்திரிக்கை செய்தி

*அரசியல் தலைவர்களின் வாரிசுகள் அரசியலில் நுழைவதில் எந்த தவறும் இல்லை. வாரிசுகளை அரசியலில் களமிறக்கிய தலைவர்கள்தான் அரசியல் இயக்கங்களை நீண்ட காலம் முன்னெடுத்துச் சென்றுள்ளனர். அதனால் வாரிசு அரசியல் தவறில்லை. அதற்காக வாரிசு இல்லாதோர் அரசியலில் சரியாக செயல்படவில்லை என்று அர்த்தமில்லை. - மு.க. ஸ்டாலின் (தி.மு.க. தலைவர்) (ஸ்டாலின் இப்படி பேசியது, அண்ணா! எம்.ஜி.ஆர்.! ஜெயலலிதா போன்றோரை ‘வாரிசு அற்றோர்’ என் கிண்டலடித்ததாக ஒரு பரபரப்பு கிளம்பியுள்ளது அரசியலரங்கில்)

*தமிழகத்தில் தங்களுக்கு எதிரான, பலமான கூட்டணியாக இருக்கிறது தி.மு.க. கூட்டணி. எனவே அதனுள் இருக்கும் வலுவான கட்சிகளை பிரித்து வெளியேற்றும் வேலையை உளவுத்துறை மூலமாக செய்து வருகிறது பா.ஜ.க. இந்த சதித்திட்டத்தை தி.மு.க.வும்., வி.சி.க.வும் புரிந்தே வைத்திருக்கிறது. எனவே எங்கள் கூட்டணியில் பிரிவு வர வாய்ப்பே இல்லை. -வன்னி அரசு (விடுதலை சிறுத்தைகளின் செய்தித் தொடர்பாளர்)

*கூட்டணி பலத்தின் மூலம் நாங்குநேரி, விக்கிரவாண்டி எனும் இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தலில் வென்றுவிட்டது அ.தி.மு.க. இந்த சந்தோஷத்தை அவர்கள் நீண்ட நாட்கள் கொண்டாட முடியாதபடி, உள்ளாட்சி தேர்தலில் மிக அதிகமாக ஆளாளுக்கு இடம் கேட்கின்றனர். தே.மு.தி.க. மூன்று முக்கிய மாநகராட்சிகளை தங்களுக்கு ஒதுக்கும்படி கேட்பதுதான் இருப்பதிலேயே செம்ம கொடுமையாம். -பத்திரிக்கை செய்தி

*பெரும்பாலான மாநிலங்களில் அந்த மாநிலத்தின் பெரும்பான்மை ஜாதியை சேர்ந்தவர்கள்தான் முதல்வர்களாகி உள்ளனர். ஆனால் தமிழகத்தில் அந்த நிலை இன்று வரை வரவில்லை. தமிழகத்தில் வன்னியர் ஒற்றுமை அடைந்தால் முதல்வர் பதவியை பிடித்துவிடலாம். 
-அன்புமணி ராமதாஸ்

*மண்டி தரப்பில் இருந்து விளக்கமான அறிக்கை வெளி வந்த பிறகு என் மீதான கோபம் குறைந்திருக்கிறது என்று நினைக்கிறேன். சினிமா மட்டுமல்ல் விளம்பரப் படங்கள் நடிக்கும்போது கூட முழு விவரங்களையும் கேட்ட பிறகுதான் நடிக்கிறேன். வணிகர்களுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்பது என் எண்ணம் அல்ல. -விஜய் சேதுபதி (நடிகர்)

*பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள் இருந்தால் அவற்றை உடனடியாக விதிமுறைகளின் படி மூடிட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆழ்துளை கிணறு கைவிடப்பட்டால், அதை களிமண், மணல், கூழாங்கல் போன்றவற்றின் உதவியோடு தரைமட்டம் வரை மூட வேண்டும்.  - ராதாகிருஷ்ணன் (வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்)

*கரூர் எம்.பி.யான காங்கிரஸின் ஜோதிமணியும், அரவக்குறிச்சியின் தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜியும் ‘அக்கா! தம்பி’ என்று பாசத்தோடு பழகி வருகிறார்கள். சமீபத்தில் அக்கா ஜோதிமணி அமெரிக்கா செல்வதற்காக தம்பியுடன் சேர்ந்து சென்னையிலுள்ள பிரபல மாலில் பர்சேஸ் செய்தது வாட்ஸ் அப்பில் வைரலானது. அக்காவுக்காக தனது எம்.எல்.ஏ. அலுவலகத்தின் ஒரு அறையில் டேபிள், சேர் போட்டுக் கொடுத்திருக்கிறாராம் செந்தில்பாலாஜி. -பத்திரிக்கை செய்தி

*சிறையில் இருக்கும் சசிகலா விடுதலையாகி வந்தாலும் அ.தி.மு.க.வில் ஒன்றும் நடக்காது. அவரின் குடும்பத்தை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தி, கழகத்தை காப்பாற்றியுள்ளோம். அந்த குடும்பத்தை எங்கள் கட்சியில் மீண்டும் சேர்க்கவே மாட்டோம். 
-வீரமணி (வணிகவரித்துறை அமைச்சர்)

*என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய விசாரணை அமைப்பு, நாடு முழுவதும் சந்தேகத்திற்கு இடமான, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், இந்த அமைப்பின் கடுமையான நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முடியாது. -டி.டி.வி.தினகரன். (அ.ம.மு.க. பொதுச்செயலாளர்)

click me!