மகனுக்காகக் கிராமம் கிராமமாக செல்லும் துரைமுருகன்... தொழிலதிபர்கள், லோக்கல் கைகள் வீட்டிற்க்கே சென்று சந்திப்பு!!

By sathish kFirst Published Mar 4, 2019, 1:44 PM IST
Highlights

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் தனது மகனுக்காக 80 வயதிலும் சக்கரமாய் சுழன்று, கிராமம் கிராமமாக சென்று முக்கிய புள்ளிகளை வீடு வீடாக சென்று சந்திப்பது திமுகவினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

நடக்கப்போகும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தமிழகத்தில் இரண்டு அணிகளும் தங்களை பலப்படுத்திக்கொள்ள கூட்டணி வேளைகளில் பிசியாக இருந்து வருகிறது. கிட்டத்தட்ட கடைசி கட்டத்தில் இருக்கும் அதிமுக திமுக, விஜயகாந்த் கட்சி எடுக்கப்போகும் முடிவில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் தொடங்கும்.  கடந்த காலங்களில் துரைமுருகன் தனது சொந்த மாவட்டமான வேலூரில் யார் போட்டியிட்டாலும், துரைமுருகனின் வீடு தேடி வந்து சந்திப்பது வழக்கம்.  தற்போது வேலூர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு முக்கியப் பிரமுகர்களை வீடு தேடிப் போய் சந்தித்து வருகிறார்.  

கடந்த சில நாட்களாக ஊராட்சி சபைகளில் கலந்துகொள்ளும் துரைமுருகன் அதற்காக ஆலங்காயம், நாட்றாம் பள்ளி ஒன்றியங்களுக்கு செல்கிறபோது ஆங்காங்கே இருக்கிற தனது நண்பர்களான தொழிலதிபர்களையும், லோக்கல் கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து வருகிறார். இது தவிர செயல்வீரர்கள் கூட்டம் உள்ளிட்ட திமுக நிகழ்ச்சிகள் பலவற்றிலும் கலந்துகொண்டார் துரைமுருகன்.

ராமநாயகண்பேட்டையில் தொழிலதிபர் ஆர்.ஆர். வாசுவை வீட்டுக்கே சென்று சந்தித்து பேசிக்கொண்டிருந்த துரைமுருகன் வேலூர் மாவட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகளையும் ஒருவர் விடாமல் போய் பார்த்து வருகிறார். காரணம் தனது மகன் கதிரானந்த் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் வேலூர் மக்களவைத் தேர்தலில் துரைமுருகன் தன் மகன் கதிர் ஆனந்துக்கு சீட் கேட்டார். ஆனால் திமுக தலைமை முஸ்லிம் லீக் கட்சிக்கு கொடுத்தது.  இந்நிலையில் இந்த தேர்தலில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு சீட் கொடுக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதால்,  துரைமுருகன் முஸ்லிம் லீக் பிரமுகர்களை தேடி வந்து சந்தித்து, ஒத்துழைப்பை கேட்டு வருகிறார். திமுக தரப்பில் சீட் இன்னும் ஒதுக்காத நிலையில், துரைமுருகன் இப்படி ஆரம்ப கட்ட வேலைகளைத் செம்ம பிசியாக சுழன்று வருகிறார்.

இது இப்படி இருக்க அதிமுக கூட்டணி சார்பில் வேலுர் ஏ.சி. சண்முகத்துக்குப் போகிறதா இல்லையா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். ஏ.சி. சண்முகம் முதலில் தாமரை சின்னத்தில் நிற்பதாகவும், பின்னர் இரட்டை இலை சின்னத்தில் நிற்பதாகவும் தகவல்கள் வந்தன. ஆனால் இப்போது வரை அவரது நிலை உறுதிப் படுத்தப்படவில்லை. ஒருவேளை அது உறுதியானால் கடுமையான போட்டி நிகழ்வது சந்தேகமே இல்லை.

click me!