பிசாசுத் தனமான அசுர அடி... ஆரோக்கியம் போச்சுன்னா... வாழ்க்கையே போச்சு... நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தல்..!

Published : Jun 09, 2020, 02:54 PM IST
பிசாசுத் தனமான அசுர அடி... ஆரோக்கியம் போச்சுன்னா... வாழ்க்கையே போச்சு... நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தல்..!

சுருக்கம்

கொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல. வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் பிசாசுத் தனமான அசுர அடி. இப்போதைக்கு இது தீராது போல தெரிகிறது என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தியுள்ளார்.   

கொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல. வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் பிசாசுத் தனமான அசுர அடி. இப்போதைக்கு இது தீராது போல தெரிகிறது என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தியுள்ளார். 

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இடைவிடாமல் தங்களது உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடிபட்ட உடனேயே அதிக வலி தெரியாது. இப்போது நமக்கு பட்டிருக்கும் கொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல. வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் பிசாசுத்  தனமான அசுர அடி. இப்போதைக்கு இது தீராது போல தெரிகிறது. இதனுடைய வலி வருங்காலங்களில் பல விதங்களில் நமக்குப் பல கடுமையான வேதனைகளை தரும்.

உங்களது குடும்பத்தாரின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்துஅவர்களை பாதுகாப்பதுதான் உங்களது அடிப்படை கடமை. எந்த சூழலிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முகக் கவசத்தைஅணியாமலும் இருக்காதீர்கள்’’என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

TVK vs Congress: காங்கிரஸ் எச்சரித்தும் கேட்காத தவெக! விஜய் பிரதமர் விவகாரத்தில் கூட்டணி விரிசலா?
DA Hike: அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு! சட்டசபையில் வெளியான சூப்பர் அறிவிப்பு