திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு துணை மேயர் பதவி.. ஒதுக்கப்பட்ட இடங்களின் முழு விவரம் இதோ..!

Published : Mar 03, 2022, 09:04 AM IST
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு துணை மேயர் பதவி.. ஒதுக்கப்பட்ட இடங்களின் முழு விவரம் இதோ..!

சுருக்கம்

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் துணை மேயர், கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 4 நகராட்சி துணைத் தலைவர் பதவிகளும், 4 பேரூராட்சி தலைவர்கள், 6 பேரூராட்சி துணைத் தலைவர் பதவிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பதவி மற்றும் ஒரு நகராட்சி தலைவர் பதவியை இந்திய கம்யூனிஸ்ட்  கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. 

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள்,  138 நகராட்சிகள்,  489 பேர் கட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் 21 மாநகராட்சிகள்,  132 நகராட்சிகள் , 435 பேரூராட்சிகளில் திமுக கூட்டணி கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.  

இதை தொடர்ந்து நாளை மேயர், துணை மேயர் ,நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. இதன் காரணமாக திமுக கூட்டணி கட்சிகள் தங்களுக்கு அதிகம் செல்வாக்கு உள்ள ஊர்களில் முக்கிய பதவிகளை திமுக அமைத்துள்ள நால்வர் குழுவிடம், பரிந்துரைத்து கேட்டுப் பெற்று வருகின்றனர். இந்நிலையில், திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் துணை மேயர், கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 4 நகராட்சி துணைத் தலைவர் பதவிகளும், 4 பேரூராட்சி தலைவர்கள், 6 பேரூராட்சி துணைத் தலைவர் பதவிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

4 நகராட்சி துணைத் தலைவர் பதவி

பவானி
புளியங்குடி
அதிராம்பட்டினம்
போடிநாயக்கனூர்

4 பேரூராட்சி தலைவர் பதவி

வத்திராயிருப்பு
பூதப்பாண்டி
சிவகிரி
புலியூர்

6 பேரூராட்சி துணைத்தலைவர் பதவி

கூத்தைப்பார்
ஊத்துக்குழி
மேல சொக்கநாதபுரம்
கீரமங்கலம்
சேத்தூர்
ஜம்பை

PREV
click me!

Recommended Stories

அன்புமணி ஒரு தூசு..! சிறையிலே அடைக்க வேண்டும்..! பாமக எம்எல்ஏ அருள் அதிர்ச்சி பேச்சு
பாகிஸ்தானில் பிரதமரை விட ராணுவ தளபதி முனீருக்கு அதிகாரம்..! வஞ்சகத்தால் பதறும் ஐ.நா சபை..!