’பரம ரகசியம்... அதை மட்டும் சொல்லவே மாட்டோம்...’ படு பயங்கரமாக பதுங்கும் ஓபிஎஸ்..!

Published : Feb 03, 2019, 03:10 PM ISTUpdated : Feb 03, 2019, 03:28 PM IST
’பரம ரகசியம்... அதை மட்டும் சொல்லவே மாட்டோம்...’  படு பயங்கரமாக பதுங்கும் ஓபிஎஸ்..!

சுருக்கம்

யாருடன் கூட்டணி பேசி வருகிறோம் என்பதை சொல்ல முடியாது, அது ஒரு ரகசியம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

யாருடன் கூட்டணி பேசி வருகிறோம் என்பதை சொல்ல முடியாது, அது ஒரு ரகசியம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

சென்னை திருவான்மியூரில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்  மக்களவை தேர்தலுக்கு தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகளின் கூட்டணி குறித்து பேசி வருகிறோம். ஆனால், யாருடன் கூட்டணி பேசி வருகிறோம் என்பதை சொல்ல முடியாது.

அது ஒரு பரம ரகசியம். ரகசிய முடிச்சுகள் அவிழ்க்கப்படும் போது கூட்டணி பற்றி நிச்சயம் அறிவிக்கப்படும் என்றார். மேலும் பாஜகவுடன் கூட்டணி வைக்க முடியாது என்று தம்பிதுரை சொல்லி வருகிறாரே என செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், அதிமுகவில் எல்லோருக்கும் கருத்து சொல்ல உரிமை உள்ளது. ஆனால் முடிவை ஒன்று சேர்ந்து அறிவிப்போம்.

எங்களுடன் ஒத்தக்கருத்து இருக்கும் கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படும் என்று கூறினார். தேசிய கட்சிகளாக இருந்தாலும், மாநில கட்சிகளாக இருந்தாலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Trisha Krishnan: த்ரிஷா புகழ்பாடும் கோலிவுட்..! "சரோஜா தேவி மாதிரி நல்ல கேரக்டர்"..! சர்ட்டிஃபிகேட் கொடுக்கும் நடிகர்கள்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!