
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு திட்டம், சட்டமன்றம், தேர்தல், பாஸ்போர்ட் உள்ளிட்ட பொறுப்புகள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
நீண்ட நாள் பேச்சுவார்த்தைக்கு பிறகு நேற்று அதிமுகவின் ஒபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்தன.
பேச்சுவார்த்தைக்கு பிறகு தலைமை அலுவலகம் சென்ற ஒபிஎஸ் அங்கு எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்து ஒன்றாக இணைந்ததாக அறிவித்தார்.
மேலும் அங்கு ஒபிஎஸ்க்கு துணை முதலமைச்சர் பதவியும், கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் வகித்து வந்த நிதித்துறையும் பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்டது.
இதையடுத்து ஆளுநர் மாளிகை சென்ற பன்னீர்செல்வம் துணை முதல்வராக பொறுப்பேற்று கொண்டார்.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேலும் சில இலாக்காக்களை ஒபிஎஸ்க்கு ஒதுக்கும்படி ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு கோரிக்கை வைத்தார்.
அவரின் கோரிக்கையை ஏற்று ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், பன்னீர்செல்வத்திற்கு திட்டம் சட்டமன்றம் தேர்தல், பாஸ்போர்ட் உள்ளிட்ட பொறுப்புகள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.