பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு வைப்புநிதி.. முதலமைச்சரின் மனிதாபிமானத்தை காட்டுகிறது. அன்சாரி வாழ்த்து.

Published : May 29, 2021, 05:59 PM ISTUpdated : May 29, 2021, 06:00 PM IST
பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு வைப்புநிதி.. முதலமைச்சரின் மனிதாபிமானத்தை காட்டுகிறது. அன்சாரி வாழ்த்து.

சுருக்கம்

கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு வைப்புநிதி அறவிக்கப்பட்டிருப்பது தமிழக அரசின் மனிதாபிமானத்தை காட்டுகிறது என மஜகபொதுச்செயலாளர் முதமிமுன் அன்சாரி பாராட்டியுள்ளார். 

கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு வைப்புநிதி அறவிக்கப்பட்டிருப்பது தமிழக அரசின் மனிதாபிமானத்தை காட்டுகிறது என மஜகபொதுச்செயலாளர் முதமிமுன் அன்சாரி பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்: கொரோனா தொற்றினால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு வாழ்நாள் உதவிகளை வழங்கிடும் வகையில் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்கள் வெளியிட்டிருக்கும்  அறிவிப்புகள் யாவும்  பாராட்டுக்குரியதாகும். 

 

கொரோனா காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் 5 லட்சம் ரூபாய் வைப்பு நிதி வழங்கப்படும், பட்டப்படிப்பு வரையிலான கல்வி-விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசு ஏற்கும், கொரோனாவால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தாய் அல்லது தந்தைக்கு ரூபாய் 3 லட்சம் வழங்கப்படும், 

கொரோனாவால் பெற்றோரை இழந்து உறவினர் அல்லது பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் தலா 3 ஆயிரம் வழங்கப்படும், ஏற்கனவே தாய் அல்லது தந்தையை இழந்த, தற்போது கொரோனாவால் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 5 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும், அரசு திட்டங்கள், அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும், ஒஎன்ற  இந்த அறிவிப்புகள் யாவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மனிதாபிமானத்தோடு, கருணை மணம் கமழ தமிழக முதல்வர் வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்புகளை மனதார  பாராட்டி வரவேற்கிறோம். இவ்வாறு அவர் பாராட்டியுள்ளார்.  

 

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி