சரியான நேரத்தில் திறமையை நிரூபித்த டெல்லி ஐஐடி.!! நாட்டு மக்கள் உயிர் காக்க காவாச் முகக் கவசங்கள்..!!

By Ezhilarasan BabuFirst Published Apr 20, 2020, 9:48 AM IST
Highlights

N95முக க்கவசங்களுக்கு இணையாக இது உருவாக்கப்பட்டுள்ளது,  கவாச்சி முகக்கவசங்கள் 98% நுண்கிருமிகளை வடிகட்டும் திறன் கொண்டவை ஆகும் ,  அதாவது 3 மைக்ரான் அளவு நுண் கிருமிகளையும் இது வடிகட்டும் ,

N95 ரக  முகக் கவசத்தின் தேவை அதிகரித்து வரும் நிலையில் , டெல்லி ஐஐடி தொழில்நுட்ப குழு  குறைந்த விலையில் புதிய ரக  முகக் கவசங்களை தயாரித்துள்ளது.   அங்கு உருவாக்கப்பட்டுள்ள முகக்கவசங்கள் N95 ரக முக வசனங்களுக்கு இணையாக செயல்படும் திறன் கொண்டவை என ஐஐடி தெரிவித்துள்ளது ,  நாடு முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது ,  இந்நிலையில் அதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ,  சமூக விலகல் , முக கவசம் அணிதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மக்கள் தங்களை வைரசில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென நாட்டு மக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.  இந்நிலையில் வீட்டை விட்டு வெளியில் வரும்போது கட்டாயம் முகம் கவசம் அணிய வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது . எனவே மிக நுண்ணிய கிருமிகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அதிக அளவில் N95 ரக முகக்கவசம் அணிவதால் அந்த வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர் .

எனவே தற்போது இந்தியாவில் N95 முகக்கவசங்களின் விலை குறைந்தது 150 ரூபாய் முதல் 1000 , ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அது மட்டுமின்றி இந்த வகை முக கவசங்கள் குறைந்த அளவிலேயே உற்பத்தி செய்யப்படுவதால் அது அனைவருக்கும் கிடைப்பதில்லை.  கிடைத்தாலும் ஏழை எளிய மக்களால் அதை வாங்  முடியாத நிலை உள்ளது எனவே  அனைத்து தர மக்களுக்கும் தரமான முகக் கவசங்கள் கிடைக்க வேண்டுமென பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மலிவு விலையில் முகக் கவசங்களை தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.  இந்நிலையில் N95 முகக் கவசத்திற்கு இணையான திறன் கொண்ட முகக்கவசத்தை டெல்லி ஐஐடி ஆராய்ச்சி மற்றும் தெழில்நுட்பக் குழுவினர் உருவாக்கி உள்ளனர். இது குறித்து தெரிவித்துள்ள அந்த குழு கோவிட்-19 க்கு எதிராக பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும்  N95 முகமூடியின் விலை அதிகமாக உள்ளது எனவே அனைத்து தரப்பு மக்களாலும் வாங்க முடியாத நிலை உள்ளது ,  எனவே இடெக்ஸ் ஆல் உருவாக்கப்பட்ட கவாச்சி என்ற முகக்கவசங்ளை உருவாக்கியுள்ளோம் , தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த முகக் கவசங்கள்   வைரஸ் நுண்கிருமிகளை வடிகட்டுதல் அடுக்கின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது . 

N95முக க்கவசங்களுக்கு இணையாக இது உருவாக்கப்பட்டுள்ளது,  கவாச்சி முகக்கவசங்கள் 98% நுண்கிருமிகளை வடிகட்டும் திறன் கொண்டவை ஆகும் ,  அதாவது 3 மைக்ரான் அளவு நுண் கிருமிகளையும் இது வடிகட்டும் , தற்போது இந்த முகக் கவசங்கள் மலிவு விலையில் மக்களுக்கு வழங்கப்பட உள்ளது . எனவே  ஒரு முகக்கவசம் தயாரிக்க 45 ரூபாய் செலவு ஆகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . அதிக மக்கள் இதைப் பயன்படுத்தி  பயன்பெற முடியும் என டெல்லி ஐஐடி தெரிவித்துள்ளது .  இந்தியன் ஜவுளி மற்றும் பைபர் பொறியியல் துறை வல்லுனர்களால் வலுவான தொழில்நுட்பங்களுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது .  

இதுகுறித்து இந்தியன் ஜவுளி மற்றும் பைபர்  துறையின் பேராசிரியர் பிபின் குமார் தெரிவிக்கையில் ,  கவாச்சி முகக் கவசங்கள் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது .   நாட்டுக்கு எதிராக பல்வேறு பொறியியல் சவால்கள் உள்ளன ,  தற்போது அதை கருத்தில் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த முகக்கவசங்கள் குறைந்தபட்சம் பத்து முறையாவது துவைத்து பயன்படுத்தும் வகையில் தடுக்கப்பட்டுள்ளது .  இது நமது மக்களை  பாதுகாக்க பயன்படும் என தெரிவித்துள்ளார் .

 

click me!