சூப்பர் ஹீரோ போல வலம் வந்த ஸ்டாலின்! இவருக்கா 65 வயசு? ஆச்சரியப்பட்ட டெல்லி தலைவர்கள்

Published : Dec 10, 2018, 03:44 PM ISTUpdated : Dec 10, 2018, 03:47 PM IST
சூப்பர் ஹீரோ போல வலம் வந்த ஸ்டாலின்! இவருக்கா 65 வயசு? ஆச்சரியப்பட்ட டெல்லி தலைவர்கள்

சுருக்கம்

ஸ்டாலின் டெல்லியில் செம்ம ஸ்டைலியாக வலம் வருவதைக் கண்டு டெல்லி தலைவர்களே ‘இவருக்கு 65 வயதா? நம்பவே முடியலை’ என்று ஆச்சரியப்படுகிறார்கள். 

டெல்லியில் ஸ்டாலின்!... கருணாநிதி இல்லாத நிலையில் தேச தலைநகர் சென்றிருக்கிறார் தி.மு.க.வின் தலைவர். தமிழக ஆட்சியின் ஆணிவேராக மாறிவிட்ட டெல்லி லாபியை அறுத்தெறிய வேண்டும்! எனும் மிகப்பெரிய ஆபரேஷனுக்கான முன்னேற்பாடுகளை செய்தாக வேண்டிய பெரிய பொறுப்புடன் டெல்லியில் வளைய வந்திருக்கிறார் ஸ்டாலின். 

இந்த ப்ராஜெக்டில் அவர் வெல்வாரா? வீழ்வாரா! என்று தென்னிந்திய அளவில் கவனம் ஈர்த்துள்ளார். இது ஒருபுறம் இருக்க தனது ஸ்டைலிஷ் லுக்கில் வட இந்திய தலைவரக்ளை ஈர்த்து அதகளம் செய்துள்ளார் தளபதி! என்று குஷியாய் கூத்தாடுகிறது தி.மு.க.வின் ஐ.டி.விங்க். ஸ்டாலினின் டெல்லி விசிட்டின் முதல்நாளான நேற்று பாரம்பரிய தமிழர் உடையில் வேட்டி சட்டையணிந்திருந்தார். சோனியா, ராகுலை சந்திக்கையில், டெல்லி குளிருக்கு இதமாக சட்டைக்கு மேல் ஒரு ஸ்லீவ்லெஸ் ஸ்வெட்டர் அணிந்து பாந்தமாக காணப்பட்டார். 

ஆனால் ரெண்டாவது நாளான இன்று மனிதர் அடித்து ஆட துவங்கிவிட்டார் என்கிறார்கள். இன்று காலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்திக்கையில் பிளாக் அண்டு பிளாக்கில் ஸ்வெட்டர் டைப் டீ ஷர்ட் மற்றும் பேண்ட் அணிந்து, கழுத்தில் ஒரு பிளாக் கலர் ஷால் போட்டிருந்தார். அருமையாய் டிஸைன் செய்யப்பட்ட ஹேர்ஸ்டைலில் தெறியாய் தோற்றமளித்தார் ஸ்டாலின். இந்த புகைப்படம் அடுத்த சில நிமிடங்களிலேயே தமிழகத்தில் பரவி தி.மு.க.வினரை குஷியாக்கியது. 

அடுத்த சில மணி நேரத்தில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார் ஸ்டாலின். அப்போது அந்த பிளாக் அண்டு பிளாக் காஸ்ட்யூமின் மேலே ஸ்லீவ்லெஸ் ஸ்வெட்டரை மாட்டிக் கொள்ள மனிதர் இன்னும் யூத் ஆகிவிட்டார். ஸ்டாலின் டெல்லியில் செம்ம ஸ்டைலியாக வலம் வருவதைக் கண்டு டெல்லி தலைவர்களே ‘இவருக்கு 65 வயதா? நம்பவே முடியலை’ என்று ஆச்சரியப்படுகிறார்கள்.

  

எல்லாம் 2016 சட்டமன்ற தேர்தலின் ‘நமக்கு நாமே’ செய்த மாயம்தான்! அதுவரையில் எப்போவோ ஏதோ என்று பேண்ட் சர்ட்டில் வலம் வரும் தளபதியை, ஒரு கார்ப்பரேட் லுக் கட்சித்தலைவராக மாற்றியது அந்த ப்ராஜெக்ட்தான். துவக்கத்தில் செம்ம சங்கோஜத்துடன் கலர்ஃபுல் காஸ்ட்யூம், ஷூ என்று மாட்டிக் கொள்ள துவங்கிய ஸ்டாலின் இப்போதோ வேண்டி விரும்பி அவற்றை அணிந்து கொண்டு உதயநிதி மற்றும் சபரீசனுக்கே சவால் விடுகிறார்! என்கிறார்கள். ஹும்! தளபதி வரவர சின்ன தளபதியாகிக் கொண்டிருக்கிறார். துர்கா மேடம் சுத்திப்போடுங்க!...

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?