ஆபரேஷன் தமிழ்நாடு! ஒவ்வொரு டீமிற்கும் டார்கெட்... அசால்டா ஸ்கெட்ச் போட்ட பிஜேபி! ரிப்போர்ட்க்கு காத்திருக்கும் டெல்லி...

By sathish kFirst Published Sep 28, 2018, 4:27 PM IST
Highlights

வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் எப்படியாவது மோடி அலையை மீண்டும் கிளப்பிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது பாஜக. அதற்காக பக்காவாக திட்டம் தீட்டி இப்போதே செயல்படுத்தவும் ஆரம்பித்திருக்கின்றனர் பாஜகவினர். 

வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் எப்படியாவது மோடி அலையை மீண்டும் கிளப்பிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது பாஜக. அதற்காக பக்காவாக திட்டம் தீட்டி இப்போதே செயல்படுத்தவும் ஆரம்பித்திருக்கின்றனர் பாஜகவினர். அதிலும் இந்த முறை தமிழகத்திற்கு தனி கவனம் செலுத்தவிருக்கிறதாம் பாஜக. அம்மா இருந்த வரை அவருடன் கூட்டணி வைத்துக்கொண்டிருந்த பாஜக, இப்போது தலையே போய்விட்டது நாம் ஏன் வாலிடம் போய் நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் நேரடியாக இந்த முறை களத்தில் இறங்கிட திட்டமிட்டிருக்கிறதாம்.

அந்த மாஸ்டர் பிளானின் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள பிஜேபியின் முக்கிய நிர்வாகிகள் சிலரை டெல்லி மேலிடத்தில் இருந்து  தேர்வு செய்திருக்கின்றனர் பாஜகவினர். கரு.நாகராஜன் பி.டி.அரசகுமார், சீனிவாசன், , வானதி என்.எம்.ராஜா இவர்களுடன் மேலும் சில பாஜக புள்ளிகளை இணைத்து இந்த அணியை உருவாக்கி இருக்கிறது பாஜக. இந்த அணியில் ஒவ்வொருவரின் பொறுப்பிலும் 3 நாடாளுமன்றத் தொகுதியை பிரித்துக் கொடுத்திருக்கின்றது பாஜக மேலிடம்.
பக்காவாக பாஜக வகுத்து கொடுத்திருக்கும் வேலைகளை சரிவர செய்வது தான் இந்த அணிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தலையாக கடமை. 

அந்த லிஸ்டில் பல வேலைகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும் , முதல் கட்டமாக ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று  பூத் கமிட்டி அமைக்க வேண்டும். என்பது தான் முதல் கட்டளை. இந்த மிஷனுக்கு பீறகு பாஜக பூத் கமிட்டி இல்லாத ஊர்கள்  என்று தமிழகத்தில் ஒரு ஊர் கூட இருக்கக் கூடாது என முன்னதாகவே எச்சரித்திருக்குக் பாஜக ,அந்த கமிட்டி அமைக்க ஒவ்வொரு ஊரிலும் பாஜக நிர்வாகிகள்  வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இருக்கிறது 

மேலிடம் கொடுத்திருக்கும் இந்த முதல் கட்ட வேலையினை நவம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்பதுதான் இப்போது முதல் டார்கெட் என்பதால் பாஜக அணியினரும் கடுமையாக உழைத்துவருகின்றனராம்  ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளின் பட்டியலை கையில் வைத்திருக்கும் இந்த அணி , அதனை பின்பற்றி ஒவ்வொரு கிராமமாக சென்று ,ஒவ்வொரு பூத் கமிட்டிக்கான ஆட்களைத் தேர்வு செய்ய ஆரம்பித்துவிட்டது.

பூத் கமிட்டிக்கான ஆள் தேர்வு செய்து முடிந்ததும், அந்த கிராமங்களுக்கு நேரில் சென்று சம்பந்தப்பட்ட இடத்தில் யாருக்கு செல்வாக்கு அதிகம்? எந்த கட்சிக்கு செல்வாக்கு அதிகம்? அந்த கிராமத்தில் பெரிய அளவிலான மதிப்பு யாருக்கு இருக்கிறது? அதற்கு காரணம் என்ன? என ஒரு மிகப்பெரிய கருத்துக்கணிப்பையே நடத்தவிருக்கிறதாம் இந்த பாஜக அணி.

அந்த கருத்துக்கணிப்பின் முடிவுடன் , கர்நாடகாவில் பாஜக பின்பற்றிய சில நுட்பங்களையும் உபயோகித்து தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் பாஜகவின் திட்டமாம். இது நாள் வரை தமிழகத்தில் பாஜக மந்தமான நிலையில் இருந்தது. ஆனால் இனி அப்படி இருக்ககூடாது என தீவிரமாக களப்பணியில் இறங்கி இருக்கும் பாஜகவின் மிக முக்கிய கருவியாக கிராமங்களை தான் பார்க்கின்றனர்.

ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தல் நடக்காத காரணத்தால் இப்போது கிராமங்களில் பஞ்சாயத்து தலைவர் கிடையாது. இதனால் கிராமங்களுக்கு அவர்களின் தேவைகள் சரியான முறையில் நிறைவேறுவது . அது மாதிரியான இடங்களில் இந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் தலையிட்டு மக்களின் தேவையை நிறைவேற்றி மக்களின்மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்பது தான் இவர்களின் மாஸ்டர் பிளான். ஆனால் இந்த பிளான் தமிழகத்தில் எந்த அளவிற்கு ஒர்க் அவுட் ஆகும் என்பது தெரியவில்லை ஆனாலும் பாஜக தன்னுடைய முயற்சியில் ஒரு பக்கம் தீவிரமாக இருக்கிறது.

ஒவ்வொரு நிர்வாகிக்கும் கொடுக்கப்பட்ட பணியை அவர் சரியாக செய்கிறாரா? என ஆராய்ந்து அன்றைய தினம் யார் யாரை சந்தித்தார்கள் , எத்தனை பேரை சேர்த்தார்கள், என அனைத்து புள்ளி விவரங்களையும் மேலிடத்துக்கு அனுப்பிவைக்க டிஜிட்டல் தொழில்நுட்பம் தெரிந்த ஆட்களையும் நியமித்திருக்கிறதாம் மேலிடம். 

இதில் ஹைலைட் என்ன என்றால் இந்த பிரைன் வாஷிங் வேலையை அதிமுகவிலும் தினகரன் அணியிலும்  உள்ள முக்கிய நிர்வாகிகளிடமும் செய்து பார்த்திருக்கிறது பாஜக.. உங்களால் எவ்வளவு பேரைக் கூட்டிட்டு வர முடியும்? உங்க எதிர்பார்ப்பு என்ன?’ என நேரடியாகவே டீல் பேசினாலும் கூட பாஜக பக்கம் வர யாரும் தயாராக இல்லை என்பது தான் தற்போதைய நிலவரமாக இருக்கிறது. ”நாங்களே ஆளுங்கட்சியில்தானே இருக்கோம். அப்புறம் எதுக்கு அங்கே வரணும்?” விவரமாக கேள்விக்கேட்கும் ஆட்களை கூட ”அது ‘நாங்க நினைக்கிற வரைக்கும் மட்டும்தான் நீங்க ஆளுங்கட்சியாக இருக்க முடியும். 

இனி எல்லா முடிவும் எங்க கையில தான் “ என வெளிப்படையாகவே மிரட்டிப் பார்த்திருக்கின்றனராம் பாஜக நிர்வாகிகள். இதனால் இம்முறை நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் பாஜகவும், திமுக அதிமுகவிற்கு இணையான போட்டிக்கட்சியாக மாற, பாஜக மேலிடம் ஆவன செய்து வருகிறது என்பது இப்போது உறுதி ஆகி இருக்கிறது.
 

click me!