தள்ளுபடியான வேட்பு மனு, பேபிம்மா இஸ்  ஹேப்பி: வேட்புமனுவுல வெச்ச ட்விஸ்டு ஒர்க் அவுட்டான ரகசியம். 

 
Published : Dec 06, 2017, 11:49 AM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
தள்ளுபடியான வேட்பு மனு, பேபிம்மா இஸ்  ஹேப்பி: வேட்புமனுவுல வெச்ச ட்விஸ்டு ஒர்க் அவுட்டான ரகசியம். 

சுருக்கம்

deepa very happy because of her application rejected in r.k.nagar

ஆர்.கே.நகரில் கரப்பான் பூச்சிக்கு கால் ஒடிஞ்சாலும் கூட ’இது சசிகலாவின் சதிச்செயல்! எடப்பாடி வேண்டுமென்றே செய்திருக்கிறார்! பன்னீருக்கு பொறாமை!’ என குய்யோ முறையோ என குதிக்கும் தீபா, தனது மனு நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில் பெரிதாக அலட்டிக் கொள்ளாதது ஆச்சரிய அதிர்ச்சியை அவரது ஆதரவாளர்களுக்கு தந்துள்ளது. 

இதுபற்றி கொஞ்சம் இறங்கி விசாரித்தால் ‘தீபாம்மாவுக்கு போட்டி போட இஷ்டமேயில்ல. அதனால இந்த நிராகரிப்புல அவங்களுக்கு சந்தோஷம்தான்.’ என்று காதைக்கடிக்கிறார்கள். 

பேபிம்மாவுக்கு மெய்யாலுமே ஹேப்பியா?: என்று அவருக்கு நெருங்கிய சகாக்களிடம் விசாரித்தால், “உண்மையிலேயே இந்த தேர்தல்ல போட்டி போட தீபாம்மாவுக்கு விருப்பமேயில்ல. காரணம் போட்டி போட்டாலும் டெப்பாசீட் கூட வாங்க மாட்டோமுன்னு தெரியும். பழனிச்சாமியும், பன்னீரும் பிரிஞ்சு கிடந்தப்ப கூட தீபாம்மா மேலே ஒரு கூட்டத்துக்கு அபிமானமும், மரியாதையும் இருந்துச்சு. ஆனா அவங்க ரெண்டு பேரும் இணைஞ்சு தினகரனை எதிர்க்க ஆரம்பிச்ச பிறகு, தன்னை பற்றிய பரபரப்பு மங்கிப்போச்சுன்னு பேபி ரொம்ப ஃபீல் பண்ணினாங்க. 

பன்னீரும், பழனிச்சாமியும் தினகரன் - சசியை வெச்சு மட்டுமே அரசியல் பண்ணிட்டு இருக்கிறாங்களே தவிர தன்னை ஒரு பொருட்டாவே மதிக்கிறதில்லைங்கிறதுதான் பேபிம்மாவின் வருத்தம். அதனால

 ஆர்.கே.நகர்ல நின்னு கேவலமா தோக்குறதுக்கு பதிலா நிற்காமலே இருக்கலாமுன்னு நினைச்சாங்க. ஆனா ’பய்ந்தாங்கொள்ளி’ அப்படின்னு எல்லாரும் ரொம்ப கிண்டல் பண்ணுவாங்கன்னு நினைச்சுதான் போட்டி போடுறேன்னு அறிவிச்சாங்க. 

இந்த தேர்தல்ல தனக்கு போட்டி போட அனுமதி கிடைக்க கூடாதுங்கிற முடிவோடதான் மனுவை நிரப்புனாங்க. மனுதாக்கல் அன்னைக்கு கூட ரொம்ப லேட்டா எந்திருச்சு, ட்ராஃபிக்ல சிக்கி மெதுவா போனதெல்லாமே கூட ஒரு வகையான டிரிக்குதான். ஆனா அவங்களோட கெட்ட நேரம் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி கிடைச்சுடுச்சு, தாக்கலும் பண்ணிட்டாங்க.

அவங்களுக்கு நெருக்கமான நாங்க ‘அய்யோ பேபிம்மா மனுதாக்கல் பண்ணிடுச்சே. இனி பிரச்சாரத்துக்கு போயே ஆகணுமே, ரிசல்ட் ரொம்ப மோசமா வந்தா பேபி தாங்காதே’ன்னு நினைச்சோம். 

 

ஆனா மனுதாக்கல் பண்ணிட்டு வந்து பேபிம்மா ரொம்ப கூலா இருந்தாங்க. அதன் காரணம் இப்போதான் புரியுது. வேட்புமனுவுல வெச்சுது பாருங்க ட்விஸ்டை. படிவத்தை முழுமையா பூர்த்தி பண்ணாமவிட்டிருந்தால் மனு தள்ளுபடியாகும் அப்படிண்ணு தீபாம்மா தெரிஞ்சு வெச்சு அதே ட்ரிக்கை ஃபாலோ பண்ணியிருக்காங்க. 

அவங்க தேர்தலுக்கு மனு தாக்குதல் பண்றது ஒண்ணும் புதுசில்லை. போன தடவையே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்ல மனுதாக்கல் பண்ணி, அது ஏற்கப்பட்டு, பிரச்சாரமும் பண்ணினாங்களே! அப்படிப்பட்டவங்க இப்ப படிவத்தை முழுமையா நிரப்பலேன்னு சொன்னால் அது வேண்டும்னே செஞ்சதுதானே!

ஆக மொத்தத்துல மனு தள்ளுபடியானதுல பேபி இஸ் ஹேப்பி.” என்கிறார்கள். 

என்னா வில்லத்தனம்!

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!