அத்தை ஜெயலலிதாவுக்கு தனிப்பட்ட வாழ்க்கை உண்டு: தீயை பற்ற வைத்துவிட்ட தீபா...

First Published Jan 12, 2018, 6:13 PM IST
Highlights
Deepa said Aunt Jayalalithaa has a personal life


ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவை முன்பெல்லாம் யாருக்கும் தெரியாது. ஆனால் ஜெ., அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில் ’அனுமதி மறுப்பு’ எனும் அடையாள அட்டையின் மூலம் வெகுஜன பிரபலமானார். ஜெ., மரணத்துக்குப் பின் அ.தி.மு.க. தாறுமாறாக கலைந்து கிடந்தபோது ‘அத்தை போல் நான் பொது வாழ்வுக்கு வருகிறேன்.’ என அறிவித்தார். 

ஜெயலலிதாவுக்கு மாற்றாக வருவார், சசிகலாவுக்கு மிக சரியான செக் ஆக அமைவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார் தீபா. ஆனால் நடந்ததோ தலை கீழ். ஜெயலலிதா பெயரில்  புது கட்சி  துவங்குவார் என பார்த்தால் தன் பெயரில் பேரவை துவங்கியபோதே அரசியல் காமெடி பெண்ணாக அடையாளம் காட்டப்பட்டுவிட்டார். 

இந்நிலையில், தீபாவின் பாதுகாவலராகவும், நண்பராகவும் சதா சர்வ காலமும் அவரோடு இருக்கும் ராஜா எனும் ஆயில் ராஜாவை மீடியாக்கள் வட்டமிட ஆரம்பித்தன. தீபாவின் கணவர் மாதவனை பொது இடத்தில் கூட டம்மியாக்கிவிட்டு ராஜா அதகள அதிகாரம் செய்வது வெளிப்படையாக விமர்சிக்கப்பட்டது. தீபாவுக்கும் - ராஜாவுக்கும் இடையிலான நட்பு அசெளகரிய வார்த்தைகளால் எதிர் அணியினரால் விமர்சிக்கப்பட்டது. மாதவனும்  பல முறை ராஜா மீது ‘எனக்கும், தீபாவுக்கு இடையில் பெரும் பிளவுகளை உருவாக்குகிறார்.’ என்று வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார் .

இந்நிலையில் சமீபத்தில் ராஜாவை பேரவையிலிருந்து நீக்கியுள்ளார் தீபா. ஆனால் இந்த நடவடிக்கையில் தனக்கு விருப்பமில்லை என்றும், நிர்வாகிகளில் மிரட்டலாலேயே இதை செய்திருப்பதாகவும் கண் கலங்குகிறார். ராஜாவின் உயிருக்கு ஆபத்து இருந்தது, அவருக்கு எந்த பிரச்னையும் வந்துவிடக்கூடாது என்பதாலேயே நீக்க முடிவை எடுத்ததாக கூறியுள்ளார். 
அதோடு தீபா விட்டிருந்தால் பரவாயில்லை. அதன் பிறகு அவர் சொன்னவைதான் அணுகுண்டு ரகங்கள். அதாவது “இந்திரா காந்தி முதல் என் அத்தை ஜெயலலிதா வரை எல்லா தலைவர்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை என்று ஒன்று உண்டு. அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. என்னை சுற்றி நச்சுப் பாம்புகளும், ஓநாய்களும் அரசியலில் சுற்றி வரும்போது எனக்கு நம்பிக்கையான ஆட்கள் தேவை. எனக்கும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. பல முறை ராஜாதான் என்னை காப்பாற்றினார்.” என்று வெளிப்படையாக கூறியுள்ளார். 

இதன் மூலம் ஜெயலலிதாவுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது! என்று வெட்ட வெளிச்சமாக பேசியிருக்கிறார்  தீபா. ஜெ.,வின் மகள் என்று அம்ருதா எனும் பெண் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், ஜெ.,வும் சோபன்பாபுவும் சேர்ந்து வாழ்ந்தனர் எனும் விமர்சனம் எழுப்பப்பட்டும் வரும் நிலையில் அதை ஜெயலலிதாவின் ரத்த சொந்தமான தீபாவே மறைமுகமாக ஒப்புக் கொள்வது போல் அந்த ஸ்டேட்மெண்ட் அமைந்துள்ளது என்று எதிர்கட்சிகள் விமர்சிக்க துவங்கியுள்ளனர். இது நாள் வரை அம்ருதாவை ‘சசிகலாவின் சதி’ என்று கூறி வந்த தீபா இப்போது இந்த ஸ்டேட்மெண்ட் மூலம் ஜெ.,வின் பெயரை கெட்ட டேமேஜ் செய்துள்ளார் என்கிறார்கள் விமர்சகர்கள். 

இந்த விவகாரத்தைப் பற்றி பேசும் அ.தி.மு.க.வினர் “தீபாவுக்கும் எங்கள் கட்சிக்கும் எந்த சம்பந்தமுமில்லை. தனியே காமெடி அரசியல் செய்து கொண்டிருக்கும் அவர் அப்படியே போய்விடுவது நல்லது. அதைவிட்டு தன்னுடைய பர்சனல் அசிங்கங்களை நியாயப்படுத்துவதற்காக எங்கள் புரட்சித்தலைவி அம்மாவையும் சேர்த்து பேசி அசிங்கப்படுத்துவதை சகிக்க மாட்டோம். 

ஜெயலலிதா, இந்திரா காந்தி போன்றோரோடு தன்னை ஒப்பிடுமளவுக்கு இவருக்கு என்ன தகுதியிருக்கிறது?” என்று பொளந்து கட்டியுள்ளனர். 
என்னம்மா? இப்படி பண்றீங்களே பேபிம்மா!
 

click me!