அடிதடி ஏற்படுமா அதிமுக தலைமை அலுவலகத்தில்...! - டிடிவி ஆதரவாளர்கள் குவிவதால் பரபரப்பு...!!!

Asianet News Tamil  
Published : Aug 21, 2017, 12:28 PM ISTUpdated : Sep 19, 2018, 01:02 AM IST
அடிதடி ஏற்படுமா அதிமுக தலைமை அலுவலகத்தில்...! - டிடிவி ஆதரவாளர்கள் குவிவதால் பரபரப்பு...!!!

சுருக்கம்

DBS supporters are concentrated in AIADS headquarters as the OBS EPS teams are allied. There is a tension in which there will be a footfall.

ஒபிஎஸ் இபிஎஸ் அணிகள் இணையுள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் டிடிவி ஆதரவாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் அங்கு அடிதடி நிலை ஏற்படுமா என்ற பதற்றம் உருவாகியுள்ளது. 

அதிமுக சசிகலா அணி ஒபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்ததையடுத்து தமிழகத்தை ஒரு உச்சகட்ட பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. 

ஜெ மறைவிற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். 

ஜெவிற்கு வழங்கப்பட்ட அனைத்து மரியாதைகளில் சசிகலாவுக்கு சற்றும் குறையவில்லை அமைச்சர்கள் மத்தியில். ஆனால் தனது முதலமைச்சர் பதவியை பிடிங்கிய கோபத்தில் பன்னீர்செல்வம் கட்சியை இரண்டாக உடைத்தார். 

இதைதொடர்ந்து ஜெ மரணம் குறித்து விசாரணை கமிஷன் தேவை என கூறி அவருக்கென ஒரு தனி பட்டாளத்தை உருவாக்கினார். இதனால் தொண்டர்கள் மத்தியிலும் அவருக்கு பலத்த வரவேற்பு கொடுத்தனர். 

இதனியையே சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்லவும் அவரது அணியில் இருந்த எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் எடப்பாடி தமது தலைமியிலான அரசை பாதுகாத்து கொள்ளவே மும்முரம் காட்டினார். 

இதைதொடர்ந்து துணை பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட டிடிவி தினகரன் எடப்பாடி பதவியை பிடுங்க முற்பட்டதால் பகை முற்றி கொண்டது. 

இதனால் டிடிவியை விட்டு பிரிந்து எடப்பாடி பன்னீரிடம் ஆதரவு கோரினார். அவரது கோரிக்கைகளையும் நிறைவேற்றினார். 

இதனிடையே எடப்பாடிக்கு எதிராக தலைமை கழகம் வர முற்பட்ட சசிகலா புஷ்பா கணவரை அதிமுகவினர் சரமாரியாக தாக்கி திருப்பி அனுப்பினர். 

இந்நிலையில், தற்போது நீண்ட நாள் பேச்சுவார்த்தைக்கு பிறகு ஒபிஎஸ் தரப்பும் இபிஎஸ்  தரப்பும் இணையும் தருவாயில் உள்ளது. 

இதைதொடர்ந்து அதிமுக தலைமை அலுவகத்தில் இருதரப்பு ஆதரவாளரகள் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் டிடிவி தினகரனால் எடப்பாடி அனுமதி இல்லாமல் நியமிக்கப்பட்ட ஆதரவாளர்களும் தலைமை கழகம் வந்துள்ளனர். இதனால் அங்கு அடிதடி நிலை ஏற்படுமா என்ற பதற்றம் உருவாகியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி
தவெக-வில் நடிகர் கவுண்டமணி..? ஐயோ ராமா... விஜய்க்காக இந்த முடிவை எடுத்தாரா..?