மதுரை மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை மீது காவல்துறையினர் 2-பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தல் விதிகளை மீறியதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகவும் அவர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 40 மக்களவை தொகுதிகளுக்கும் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அனைத்து கட்சியினர் வேட்பாளர் அறிவித்த நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து தேர்தலுக்கான சிறப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தையும் துவங்கியுள்ளது. மேலும் தேர்தல் ஆணையம், தேர்தல் குறித்தும், பல விதிகளை விதித்துள்ளது. இந்த விதிகளை கருத்தில் கொண்டு செயல்படுமாறும், அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்திருந்தது. மேலும், வாகனங்கள் அனைத்தும், காவல்துறையினரின் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் அமமுக சார்பில் மதுரை தொகுதிக்கு டேவிட் அண்ணாதுரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நடத்தை விதி மீறியதாக டேவிட் அண்ணாதுரை மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் சிம்மக்கல், தல்லாகுளத்தில் அண்ணா, பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்த போது தேர்தல் விதி மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் விதிகளை மீறியதாக டேவிட் அண்ணாதுரை உள்பட 200-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.