ஆபத்தான நியூஸ்: கொரோனா பெயரில் ஆன்லைன் மோசடி... மொபைல் ஆப் டவுன்லோடு வேண்டாம்... இன்டர் போல் எச்சரிக்கை.!!

By T BalamurukanFirst Published May 19, 2020, 11:33 PM IST
Highlights

வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தைத் திருட இணையதள வைரஸ் ஒன்று பரப்பப்பட்டு வருவதாக சி.பி.ஐ எச்சரித்துள்ளது. இன்டர்போல் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் சி.பி.ஐ, அனைத்து மாநில அரசுகளுக்கும், வங்கிகளுக்கும் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளது.


வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தைத் திருட இணையதள வைரஸ் ஒன்று பரப்பப்பட்டு வருவதாக சி.பி.ஐ எச்சரித்துள்ளது. இன்டர்போல் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் சி.பி.ஐ, அனைத்து மாநில அரசுகளுக்கும், வங்கிகளுக்கும் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளது.


கொரோனா வைரஸ் ரூபாய் நோட்டுகள் மூலம் பரவ வாய்ப்புகள் அதிகம் உள்ளது.சீனாவில் வுகான் நகரில் உள்ள வங்கிகளில் ரூபாய் நோட்கள் எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதன்காரணமாக மக்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை பயன்படுத்தி வருகிறார்கள். கொரோனா வந்த பிறகு டிஜிட்டல் பணமாற்றம் அதிகஅளவில் நடக்கிறது. இதை குறிவைத்து பணத்தை பறிக்கும் கும்பல் வைரஸ் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த வைரஸ் நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனுக்குள் இறங்கிவிட்டால் நம் பணம் நமக்கு சொந்தமல்ல.எனவே பொதுமக்கள் உஷாராக மொபைல் போனை பயன்படுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தைத் திருட இணையதள வைரஸ் ஒன்று பரப்பப்பட்டு வருவதாக சி.பி.ஐ எச்சரித்துள்ளது. இன்டர்போல் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் சி.பி.ஐ, அனைத்து மாநில அரசுகளுக்கும், வங்கிகளுக்கும் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளது.

கொரோனா தொற்று தொடர்பான விபரங்களைப் பெற குறிப்பிட்ட செயலியைப் பதிவிறக்கும் செய்யும்படி பொதுமக்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படுகிறது. அதனை யாரவரது பதிவிறக்கம் செய்தால் அதில் மறைந்துள்ள   ‘செர்பியரஷ் ட்ரோஜன்’ எனும் இணையதள வைரஸ் கணினி அல்லது செல்போனில் புகுந்துகொள்ளும்.

அதன் மூலம் மின்னஞ்சல் முகவரி, வங்கிக் கணக்கு விவரங்கள், கிரெடிட் கார்டு விவரங்களையும் ரகசிய குறியீடுகளையும் திருட முடியும் என்று கூறப்படுகிறது. பின்னர் அதனைப் பயன்படுத்தி வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் திருடப்படுவதாக கூறப்பட்டுள்ளது.ஆகவே, கொரோனா பெயரில் வரும் நம்பகத்தன்மை இல்லாத செயலிகளை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்யக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பெயரில், ஆன்லைன் பண மோசடி மற்றும் சைபர் குற்றங்கள் நடப்பதால், எச்சரிக்கையாக இருக்கும்படி, உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

click me!