அதைத் தொடர்ந்து செய்தியாளர்கிளடம் பேசிய அவர் கூறியதாவது, பாஜக பெற்றிருப்பது பெரிய வெற்றி அல்ல, ஆனால் ஏதோ பெரிய வெற்றி பெற்று விட்டது போல கட்சியினர் தம்பட்டம் அடித்து கொண்டிருக்கிறார்கள்.
உத்தரபிரதேச மாநிலத்தின் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும் கடந்த முறை பெற்ற தொகுதிகளை விட இப்போது வெற்றி பெற்றிருக்கும் இடங்களில் வாக்கு எண்ணிக்கை குறைந்திருக்கிறது என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் வெற்றி அடைந்த வேட்பாளர்களுக்கு பாராட்டு விழா சென்னை கோடம்பாக்கத்தில் நடந்தது. அதில் கலந்துகொண்டவர் திருமாவளவன் இவ்வாறு கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற துணைமேயர், பேரூராட்சி தலைவர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார். மேடையில் பேசிய அவர் பெண்கள் அதிகார வரம்பில் இருக்க வேண்டும் என சட்ட மேதை அம்பேத்கர் விரும்பியதாக அப்போது திருமாவளவன் கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி என்பது சாதிக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி அல்ல இது ஒடுக்கப்பட்டவர்களின் தலைநிமிர்வுக்காக உருவாக்கப்பட்டு கட்சி என்றார். பெண்கள் அரசு துறைகளில் அதிகாரிகளாக இருப்பதைவிட அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்றும் அவர் கூறினார். எப்போதும் பெண்கள் சட்டத்தை இயற்றும் இடங்களில் இருக்க வேண்டும், அப்போது தான் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் குறையும் என்றார்.
undefined
மொத்தம் 16 இடங்களில் 8 இடங்களில் போட்டியின்றி விடுதலை சிறுத்தைகள் வெற்றி பெற்றதாகவும், வென்ற இடங்களில் சில அத்துமீறல்கள் நடந்ததாகவும் அவர் கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக போட்டி வேட்பாளர்களை உடனடியாக ராஜினாமா செய்துவிட்டு தன்னை வந்து சந்திக்குமாறு முதல்வர் அறிக்கை வெளியிட்டது நாகரீகத்தின் உச்சம் என்றார். 5 மாநில சட்டமன்ற தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றிருப்பது இந்திய ஆபத்தான பாதையை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதை காட்டுகிறது என்றும், இதோ அவர்கள் விரைவில் தமிழகத்தை குறி வைத்து விட்டார்கள், பாஜக மெல்ல காய் நகர்த்தி கொண்டு வருகின்றது, எனவே தமிழகத்தை காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்றார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்கிளடம் பேசிய அவர் கூறியதாவது, பாஜக பெற்றிருப்பது பெரிய வெற்றி அல்ல, ஆனால் ஏதோ பெரிய வெற்றி பெற்று விட்டது போல கட்சியினர் தம்பட்டம் அடித்து கொண்டிருக்கிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றிருக்கிறது, உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாஜக முன்பு வெற்றி பெற்றிருந்த தொகுதிகளை விட இப்போது வெற்றி சரிந்திருக்கிறது என்றார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அகில இந்திய அளவில் சமூகநீதி கூட்டமைப்பு என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது ஒரு அரசியல் முன்னணியாக, ஒரு மாற்று அரசியல் சக்தியாக உருப்பெற வேண்டும் என்றார்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் இடதுசாரிகளை உள்ளடக்கிய ஒரு கூட்டணி வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. எப்போதும் இந்தியாவுக்கு தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு காங்கிரசோடு இணைந்து இடதுசாரிகளை இணைத்து சனாதன சக்திகளை வீழ்த்த வேண்டும் என்ற வியூகம் அமைத்து அதில் வெற்றி பெற்று சாதித்த ஒரு மாநிலம் கிடையாது. ஆனால் தமிழகம் அதை செய்து கொண்டிருக்கிறது என்றார்.