சீனா- பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக ஒன்றிணைந்து நிற்கும் ஆபத்து: அடித்து துவம்சம் செய்ய தயாரானது விமானப்படை.

By Ezhilarasan BabuFirst Published Sep 29, 2020, 3:13 PM IST
Highlights

உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள தவுலத்-பேக்-ஓல்டி  கிழக்கில் லடாக்கில் அமைந்துள்ள தளங்களில் உள்ள ஜவான்களுக்கு தேவையான போக்குவரத்து சேவை மற்றும் ரேஷன் பொருட்களை விமானங்கள் வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை போர் ஏற்பட்டால் சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக ஒன்றிணைந்து நிற்கக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.  இந்நிலையில் சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய விமான தளங்கள் 24 மணி நேரமும் செயல்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான தகவலை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த 5 மாதங்களுக்கு மேலாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் இந்திய எல்லையில் அத்துமீறி வருவதுடன், தீவிரவாத ஊடுருவல் மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் கிழக்கு லடாக் பிராந்தியத்தில் இந்திய விமானப்படையின் சுகோய் விமானம்  தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுவருவதாகவும், ஒருவேளை போர் ஏற்படும் பட்சத்தில் சீனா- பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் இந்தியாவுக்கு எதிராக நிற்க்கக்கூடும் என்பதால் இந்திய விமான படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது. 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர்  தொலைவில் உள்ள இந்திய விமானத்தளம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், எல்லைப் பகுதியில் விமானப்படைக்கு சொந்தமான போக்குவரத்து மற்றும் போர்விமானங்கள், ஹெலிகாப்டர்களின் செயல்பாடுகள் இரவு பகல் பாரமல் இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. கார்டுங்லா பாஸ் மற்றும் ஷியோக்  நதி வழியாக இந்திய விமானங்கள் கண்காணிப்பு மற்றும் போக்குவரத்தை தீவிரப்படுத்தி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சுகோய்-30 மற்றும் எம்கேஐ போன்றவற்றின் நடவடிக்கைகளும் தீவிரமாக இருப்பதாக ஏஎன்ஐ தெரிவித்துள்ளது. மேலும் போக்குவரத்து  விமானமான  சி-30, ஜோ சூப்பர் ஹெர்குலிஸ், லுஷின் - 76  மற்றும் அன்டன் - 32  ஆகியவற்றின் செயல்பாடுகள் இரவு பகலும் பாராமல் தொடர்வதாக கூறப்பட்டுள்ளது. 

உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள தவுலத்-பேக்-ஓல்டி  கிழக்கில் லடாக்கில் அமைந்துள்ள தளங்களில் உள்ள ஜவான்களுக்கு தேவையான போக்குவரத்து சேவை மற்றும் ரேஷன் பொருட்களை விமானங்கள் வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானும் சீனாவும் ஒன்றிணைந்து இந்தியாவுக்கு எதிராக நிற்கும் என்ற அச்சுறுத்தல் குறித்து கேட்டதற்கு விமான படையின் லெப்டினன்ட் நிலை அதிகாரி ஒருவர், எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள விமானப்படை முற்றிலும் தயாராக உள்ளது. இந்தியாவால் இருமுனைகளிலும் தாக்குதல் மேற்கொள்ள முடியும் எனவும் கூறினார். சில நாட்களுக்கு முன்பு சீனாவுடனான எல்லை பதற்றத்திற்கு மத்தியில் இந்திய விமானப்படையில் ரபேல் போர் விமானம் விமானத்தளத்தில் இணைக்கப்பட்டது. ரபேல் போர் விமானம் லடாக் புறப்பட்டுச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

click me!