அப்பா எனக்கு ஆன்லைன் வகுப்பு புரியலப்பா..!! கதறிய மாணவன், நள்ளிரவில் எடுத்த பயங்கர முடிவு..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 3, 2020, 11:43 AM IST
Highlights

தந்தை இளங்கோவிடம் ஆன்லைன் வகுப்பு புரியவில்லை என்று கூறியதாக தெரிகிறது, அதற்கு இளங்கோவன் மாணவனை கண்டித்ததாக கூறப்படுகிறது.

ஆன்லைன் வகுப்பு புரியாத காரணத்தால் பதினோராம் வகுப்பு படித்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டிபட்டி அருகே 11ம் வகுப்பு மாணவன் ஆன்லைன் வகுப்பு புரியாத காரணத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கரட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோ, இவருடைய மகன் விக்கிரபாண்டி (16) வயது ஆகிறது. 

விக்கிரபாண்டி திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார், கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊரான கரட்டுப்பட்டியிலிருந்து ஆன்லைன் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாணவன் விக்ரபாண்டி அவரது தந்தை இளங்கோவிடம் ஆன்லைன் வகுப்பு புரியவில்லை என்று கூறியதாக தெரிகிறது, அதற்கு இளங்கோவன் மாணவனை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மாணவன் விக்ரபாண்டி, அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை  செய்ய முயன்றுள்ளார். 

பின்னர் அவரது பெற்றோர்கள் மாணவனை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர், பின்னர் அங்கு மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து க.விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மாணவர்கள் தூக்கிட்டு மற்றும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. விக்கிரபாண்டி மரணத்தைத் தொடர்ந்து அவரது பெற்றோர்களும் அப்பகுதி மக்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 

 

click me!