
தமிழக அரசு ஊழல் அரசு என்று சொல்ல ஓபிஎஸ்க்கு எந்த வித உரிமையும் கிடையாது என்றும், மணல் ஊழல் மன்னன் சேகர் ரெட்டியை தமிழகத்துக்கு அறிமுகம் செய்து வைத்ததே ஓபிஎஸ்தான் என அமைச்சர் சிவி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், தமிழக அரசு என்றாலே ஊழல் அரசுதான் என்று மக்கள் கருதுகிறார்கள் என தெரிவித்தார்.
மேலும் இரு அணிகள் இணைப்பு என்பது சாத்தியமில்லை என்றும் அமைச்சர்கள் மட்டுமே இணைப்பு குறித்து பேசி வருகிறார்கள் என ஓபிஎஸ் கலாய்த்தார்
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், ஊழல் குறித்து பேசுவதற்கு ஓபிஎஸ்க்கு எந்த உரிமையும் இல்லை என தெரிவித்தார்.
ஊழல் குறித்து பேசுவதற்கு முன் ஓபிஎஸ், சேகர் ரெட்டிக்கு பதில் சொல்ல முடியுமா என கேள்வி எழுப்பினார்.
சேகர் ரெட்டி யார்? அவருக்கும் ஓபிஎஸ்க்கும் என்ன தொடர்பு என கூறிய சி.வி.சண்முகம், தமிழகத்துக்கு சேகர் ரெட்டியை தமிழ்நாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்ததே ஓபிஎஸ் தான் என குற்றம்சாட்டினார்.