அ.தி.மு.க.வினுள் பூகம்பத்தை கிளப்பும் ‘40 லட்சம்’! தல அஜித்தின் அதிரடி முடிவு...

By sathish kFirst Published Nov 14, 2018, 1:22 PM IST
Highlights

ஆட்சியைக் கவிழ்த்திட திட்டமிடும் நோக்கிலேயே ஸ்டாலினும், தினகரனும் ரகசிய சந்திப்பு நடத்தியுள்ளனர்! எனும் கோணத்தில் பேசியிருக்கும் மாஜி அமைச்சர் வைகை செல்வன்

ஆட்சியைக் கவிழ்த்திட திட்டமிடும் நோக்கிலேயே ஸ்டாலினும், தினகரனும் ரகசிய சந்திப்பு நடத்தியுள்ளனர்! எனும் கோணத்தில் பேசியிருக்கும் மாஜி அமைச்சர் வைகை செல்வன், ‘சட்டமன்ற உறுப்பினர்களின் அதிகாரத்தை பறித்து அவர்களை 
சாமான்யர்களாக்கியது தினகரனின் சாதனை. கொள்கையே இல்லாமல் கட்சி நடத்திவருவது ஸ்டாலினின் சாதனை. இரண்டு பேரும் சேர்ந்து எங்களை வீழ்த்திட கனவு காண்கின்றனர்.’ என்று குட்டியிருக்கிறார். 

*    தீபாவளி சமயத்தில் அ.தி.மு.க.வின் முக்கிய பேச்சாளர்கள் சுமார் நூற்று அறுபது பேருக்கு, சுமார் நாற்பது லட்சம் ரூபாயானது கிரேடு வரிசை வாரியாக பிரித்து வழங்கப்பட்டுள்ளதாம். இடைத்தேர்தல் உள்ளிட்ட பலவற்றை மனதில் வைத்து இந்த நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது. இதை வழங்கியவர் மாஜி அமைச்சர் வளர்மதி. இப்போது விவகாரம் என்னவென்றால், இப்படி பணத்தை வழங்கிட கட்டளையிட்டது யார்? கட்சி நிதியிலிருந்து அதை வழங்கினாரா அல்லது வளர்மதியின் சொந்த பணமா? ஒருங்கிணைப்பாளர்கள் இருக்கையில் இவர் இப்படி செய்ய வேண்டிய அவசியமென்ன? என்று கேள்விகள் எழுந்துள்ளன.

*    எப்போது சட்டசபை தேர்தல் நடந்தாலும் அதில் ரஜினிகாந்த் சுமார் நூற்று பத்து தொகுதிகள் வெற்றி பெறுவார் என்பது கமலின் அண்ணன் சாருஹாசனின் கணிப்பு. கமலுக்கு அந்தளவுக்கு பலமில்லை என்றும் சொல்லியிருப்பவர், பலமான கூட்டணி வைத்தால் மட்டுமே கமல் ஏதோ பிரகாசிக்க முடியும்! என்றும் கடுப்பேற்றி இருக்கிறார். 

*    தனது லவ்வர் விக்னேஷ்சிவனுக்காக அஜித்திடம் கால்சீட் கேட்டு காத்துக் கிடக்கிறார் நயன். யாரிடமும் இறங்கிவராத நயனுக்கும், யாருக்காகவும் தன்னை மாற்றிக்காத அஜித்துக்கும் இதனால் சின்ன உரசலாம். இதில் ஹைலைட் என்னவென்றால் விஸ்வாசம் முடிந்த பின் விநோத் இயக்கத்தில் நடிக்கும் அஜித், அதற்கடுத்து விஷ்ணுவர்தனுக்கு டேட்ஸ் கொடுத்துவிட்டார். நயனை கண்டுக்கவேயில்லையாம். 

*தேவர் மகன், சண்டியர் (விருமாண்டி) பட துவக்கத்தின் போது கமலுக்கு, டாக்டர் கிருஷ்ணசாமி கொடுத்த குடைச்சல் போல் தேவர்மகன் - 2 டைமிலும் பெரியளவில் நடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இரு தரப்புமே இந்த  யுத்தத்துக்கு தயாராகி வரும் நிலையில், ஆளும் அரசின் சப்போர்ட் சாட்ஸாத் டாக்டருக்கேதான்.
 

click me!