கடலூர் திமுக எம்.பி. தனிமைப்படுத்தப்பட்டார்... சுகாதாரத்துறையும் நோட்டீஸ் ஓட்டியதால் பரபரப்பு..!

By vinoth kumarFirst Published May 3, 2020, 4:39 PM IST
Highlights

கடலூர் திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.எஸ்.ரமேஷ்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். எம்.பி.யிடம் பரிந்துரை கடிதம் வாங்கி பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கடலூர் திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.எஸ்.ரமேஷ்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். எம்.பி.யிடம் பரிந்துரை கடிதம் வாங்கி பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கடலூர் திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் பண்ருட்டியில் வசித்து வருகிறார். பண்ருட்டியை அடுத்த தட்டாஞ்சாவடி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தனது பேத்திக்கு புற்றுநோய் சிகிச்சை பெற ஏதுவாக மக்களவை உறுப்பினர் பரிந்துரை கடிதம் பெறுவதற்காக ரமேஷை நேற்று மாலை சந்தித்து கடிதம் பெற்றுச் சென்றுள்ளார்.

அப்போது, எம்.பி.யிடம் கடிதம் பெற்றுவிட்டு அந்தப் பெண் வீட்டிற்கு சென்றபோது, அவருடைய பேத்திக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிறுமியுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனைக்காக உட்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனர். அந்த வகையில் சிறுமியின் பாட்டி, கடலூர் திமுக மக்களவை உறுப்பினரை சந்தித்து உரையாடியதால், அவரும் வீட்டிலும் தனிமைப்படுத்தப்பட்டவர். 

மேலும், அவரது கும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டின் முன்பு நகராட்சி அலுவலர்கள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.  ஆபத்திற்கு உதவுவதற்காக பரிந்துரை கடிதம் கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!