விஜயை சுற்றி கிரிமினல்கள்.. விஜய்க்கு ஆபத்து... அடுத்தடுத்து பகீர் கிளப்பும் எஸ்ஏசி..! அதிர்ச்சி பின்னணி..!

By Selva KathirFirst Published Nov 9, 2020, 2:27 PM IST
Highlights

நடிகர் விஜயை சுற்றி சில கிரிமினல்கள் இருப்பதாகவும், விஜய் தற்போது ஒரு டேஞ்சரான விஷ வலையில் சிக்கியுள்ளதாகவும் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் கூறி வருவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜயை சுற்றி சில கிரிமினல்கள் இருப்பதாகவும், விஜய் தற்போது ஒரு டேஞ்சரான விஷ வலையில் சிக்கியுள்ளதாகவும் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் கூறி வருவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் வீட்டின் குடும்ப பிரச்சனை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. மக்கள் இயக்கத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்ட காரணத்தினால் நடிகர் விஜய் பெயரில் தனியாக கட்சி ஆரம்பித்து அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் எஸ்ஏசி. ஆனால் அந்த கட்சியில் தனது ரசிகர்கள் யாரும் சேரக்கூடாது என கட்டளை போட்டுள்ளார் விஜய். அதோடு மட்டும் அல்லாமல் எஸ்ஏசி தனது கட்சியில் தனது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஜய் பகிரங்கமாக எச்சரித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது நடிகர் விஜயை சினிமாவில் அறிமுகப்படுத்தி தற்போது உச்ச நட்சத்திரமாக்கிய எஸ்ஏசிக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. மக்கள் இயக்கத்தில் இருந்து ஓரங்கப்பட்டதால் தனியாக கட்சி ஆரம்பித்த நிலையில் அதற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து அதனையும் விஜய் கெடுத்துவிட்டதாக எஸ்ஏசி கருதுகிறார். மேலும் ஒழுங்காக படிக்காமல், ஏகப்பட்ட அரியர்களுடன் சுற்றிக் கொண்டிருந்த நடிகர் விஜய் ஆசைப்பட்டார் என்கிற ஒரே காரணத்திற்காக அத்தனை வருடங்கள் தான் சம்பாதித்து வைத்த பணத்தை எல்லாம் முதலீடு செய்து விஜயை ஹீரோவாக்கி படம் எடுத்தார் எஸ்ஏசி.

ஆனால் துவக்கத்தில் விஜய் ஹீரோவாக நடித்த படங்கள் அனைத்தும் படு தோல்வி அடைந்து எஸ்ஏசி கடனாளி ஆனார். ஆனாலும் விடாமல் விஜயை ஹீரோவாக்கி அவரை முன்னணி நாயகனாக்கியதுடன் அவருக்கு என்று ரசிகர் மன்றம் ஆரம்பித்து தற்போது திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு இணையாக அந்த ரசிகர் மன்றம் மக்கள் இயக்கமாக மாறியதிலும் எஸ்ஏசியின் கடும் உழைப்பு உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு வரை சினிமா விஷயங்களில் எஸ்ஏசி கூறியதை கேட்டு வந்த விஜய் அதனை நிறுத்திக் கொண்டார். இந்த நிலையில் மக்கள் இயக்க செயல்பாடுகளிலும் எஸ்ஏசிக்கு தடை போட்டுவிட்டார் விஜய்.

இப்படி தான் கஷ்டப்பட்டு தனது மகனை உருவாக்கிய நிலையில் தனக்கு தடை போட்டதால் வேறு வழியில் பயணிக்கலாம் என்பதால் தான் புதிய கட்சி ஆரம்பித்தார். ஆனால் அதனையும் அறிக்கை மூலமாக விஜய் தவிடுபொடியாக்கிவிட்டார். இதனால் தனது மனக்குமுறல்களை பல்வேறு டிவி சேனல்கள் மற்றும் யூட்யூப் சேனல்களை அழைத்து கொட்டித் தீர்த்து வருகிறார். அப்படி ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் தான், நடிகர் விஜயை சுற்றி கிரிமினல்கள் இருப்பதாக எஸ்ஏசி கூறியுள்ளார்.

அதோடு மட்டும் அல்லாமல் விஜயை சுற்றி ஒரு டேஞ்சரான விஷயம் நடந்து கொண்டிருப்பதாகவும் எஸ்ஏசி தெரிவித்துள்ளார். மேலும் விஜய் ஒரு விஷ வலையில் சிக்கியுள்ளதாகவும் குண்டை தூக்கி போட்டுள்ளார் எஸ்ஏசி. இந்த பிரச்சனைகளில் இருந்து விஜயை காப்பாற்றவே தான் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளதாகவும் எஸ்ஏசி தெரிவித்துள்ளார். அதாவது எஸ்ஏசி நடிகர் விஜய் தற்போது ஒரு சிக்கலில் உள்ளதாக கூறியுள்ளார். அது என்ன சிக்கல் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. 

இது குறித்து விசாரித்த போது கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகராக உள்ள விஜய் சம்பாதித்த பணம் ஏகப்பட்ட இடங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நடிகர் விஜய் வாங்கும் கோடிக்கணக்கான ரூபாய் பணம் பல்வேறு பினாமி பெயர்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற வருமான வரிச்சோதனை, மற்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சோதனை போன்றவற்றில் இது தொடர்பான பல ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியிருப்பதாக கூறுகிறார்கள்.

இவற்றை அடிப்படையாக வைத்து தேர்தல் சமயத்தில் விஜய்க்கு நெருக்கடி கொடுக்க டெல்லி முயன்று வருவதாகவும் அதனை தடுக்க வேண்டும் என்றால் அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் அல்லது தமிழகத்தில் வலுவான ஒரு கட்சியை ஆதரிக்க வேண்டும் என்று எஸ்ஏசி கருதுகிறார். ஆனால் இதில் விஜய்க்கு உடன்பாடு இல்லை என்கிறார்கள். இதைத்தான் விஜயை சுற்றி டேஞ்சரான விஷயங்கள் நடந்து கொண்டிருப்பதாக எஸ்ஏசி கூறியுள்ளதாக சொல்கிறார்கள்.

click me!