பாஜகவுக்கு பெருமிதங்கள் எதுவும் கிடையாது... வண்ணம்பூசி அடையாளம் மாற்றுவதே வேலை... திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசியதற்கு மா.கம்யூ. கண்டிப்பு!

By Asianet TamilFirst Published Nov 4, 2019, 8:08 AM IST
Highlights

திருவள்ளுவரை சாதி, மதம், மொழி, தேசிய எல்லைகளைக் கடந்து உலகம் முழுவதும் பலரும் கொண்டாடி வருகிறார்கள். கடந்த காலத்தில் திருவள்ளுவரை கொண்டாடிய யாரும் அவரை ஒரு அரசியல் இயக்கம் சார்ந்து சித்தரிக்க முயன்றது  கிடையாது. 

பாஜகவுக்கென சொந்த பெருமிதங்களும் வளமான வரலாறுகளும் எப்போதும் இல்லாத நிலையில் பெருமைக்குரிய ஆளுமைகளை வண்ணம் பூசுவது கண்டிக்கத்தக்கது என்று மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆர்.எஸ்.எஸ். பரிவார அமைப்புக்கள் இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாக பிரித்ததையோ கூட்டாட்சித் தத்துவத்தையோ ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல. வரலாறு நெடுகிலும் அத்தகைய  முயற்சிகளை தொடர்ந்து எதிர்த்தே வந்திருக்கிறார்கள். தற்போது மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நவம்பர் 1 அன்று வெளியிட்டுள்ள பாஜக வெளியிட்டுள்ள முகநூல் பதிவுகள் இதற்கு சொந்தம் கொண்டாட முயற்சிப்பதோடு, அதில் பயன்படுத்தப்பட்டுள்ள  திருவள்ளுவர் படத்தில் திருவள்ளுவருக்கு, காவி உடையும், திருநீர் பூச்சும் அணிவித்து இழிவு செய்திருக்கிறார்கள்.
திருவள்ளுவரை சாதி, மதம், மொழி, தேசிய எல்லைகளைக் கடந்து உலகம் முழுவதும் பலரும் கொண்டாடி வருகிறார்கள். கடந்த காலத்தில் திருவள்ளுவரை கொண்டாடிய யாரும் அவரை ஒரு அரசியல் இயக்கம் சார்ந்து சித்தரிக்க முயன்றது  கிடையாது. பாஜகவுக்கென சொந்த பெருமிதங்களும் வளமான வரலாறுகளும் எப்போதும் இல்லாத நிலையில் பெருமைக்குரிய ஆளுமைகளை வண்ணம் பூசி, சில அடையாளங்களை மாற்றி தங்களுக்கானவர்களாக சித்தரிக்கும் இந்த முயற்சியை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  வன்மையாக கண்டிக்கிறது. திருவள்ளுவரை இழிவுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

click me!