பெருந்தொற்றின் கோரமுகம்... சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் கொரோனாவுக்கு பலி..!

Published : Apr 22, 2021, 09:11 AM ISTUpdated : Apr 23, 2021, 10:12 AM IST
பெருந்தொற்றின் கோரமுகம்... சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் கொரோனாவுக்கு பலி..!

சுருக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.   

சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி (34) டெல்லியில் ஆங்கில நாளிதழில் பணியாற்றி வந்தார். அவருக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், தீவிர சிகிச்சை பலனின்றி இன்று காலை ஆஷிஷ் யெச்சூரி உயிரிழந்தார். தன்னுடைய மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி இறந்தது பற்றி சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “கொரோனாவால் பாதிக்கப்பட்ட என்னுடைய மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரியை இந்த காலைப் பொழுதில் இழந்துவிட்டேன் என்பது மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். எங்களுக்கு நம்பிக்கையூட்டி சிகிச்சை அளித்து எங்களுடன் நின்ற மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், எண்ணற்ற மற்றவர்கள்  அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

Vijay vs Stalin: இடைத்தேர்தலை புறக்கணிக்கும் திமுக.! முன் வைத்த காலை பின் வைக்கிறதா?! மீண்டும் மேலே பறக்கும் விசில் கொடி.!
TN Assembly byelection Candidate: இடைத்தேர்தல் யுத்தம்.! விசில் சின்னத்தில் போட்டியிடும் அதிமுக முகங்கள்.! செக் மேட் யாருக்கு?