ஹெச்.ராஜாவுக்கு தமிழக அரசு நோட்டீஸ்... நீதிமன்றம் முன் ஆஜராக உத்தரவு

By manimegalai aFirst Published Sep 18, 2018, 5:07 PM IST
Highlights

நீதிமன்றம், நீதிபதி மற்றும் போலீஸ் அதிகாரிகளை வாய்க்கு வந்தபடி கண்ணாபின்னாவென சகட்டுமேனிக்குப் பேசி வம்பில் 
சிக்கிவிட்டார் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா

நீதிமன்றம், நீதிபதி மற்றும் போலீஸ் அதிகாரிகளை வாய்க்கு வந்தபடி கண்ணாபின்னாவென சகட்டுமேனிக்குப் பேசி வம்பில் 
சிக்கிவிட்டார் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது, போலீசார் தடுத்து நிறுத்தியதால், ஆத்திரமுற்ற பாஜக 
ஹெச்.ராஜா, தன் நிலை தடுமாறி, என்ன பேசுகிறோம் என்று தெரியாமல், மயிறு மட்டை என மோசமாக வாய்க்கு வந்ததை பேசி 
உளறிக் கொட்டிவிட்டார்.

இதைப்பார்த்த காவல் துறை அதிகாரிகள், நீதித்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். தமிழகத்தின் ஏராளமான இடங்களில் அவருக்கு 
எதிராக புகாரும் கொடுக்கப்பட்டது., சில புகார்களின் அடிப்படையில், ஹெச்.ரஜாவை பிடிக்க 2 தனிப்படை போலீசார் குழு 
அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், ஒரு கூட்டத்தில் ஹெச்.ராஜா கலந்து கொண்டு 
பேசினார்.

இது தொடர்பாக நேற்று விசாரணைக்கு வந்த வழக்கில், ஹெச்.ராஜா, அக்டோபர் 3 ஆம் தேதி 4.30 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று 
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனை தொடர்ந்து இன்று அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், ஹெச்.ராஜாவுக்கு 
சம்மன் ஒன்றை அனுப்பினார். நேற்றைய நீதிமன்ற உத்தரவை இன்றைய சம்மனில் விளக்கமாக கூறி நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் 
அனுப்பப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றம், காவல்துறை அதிகாரிகள் பற்றி ஹெச்.ராஜா பேசியிருந்த நிலையில், அவருக்கு உயர்நீதிமன்றம் சம்மன் 
அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!