தமிழகத்தில் மாநகராட்சிகள் யார் யாருக்கு..? மேயர் பதவிகளுக்கு இடஒதுக்கீடு அறிவிப்பு!

By Asianet TamilFirst Published Dec 11, 2019, 10:13 PM IST
Highlights

திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில், திண்டுக்கல், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய மாநகராட்சிகளில் எல்லா பிரிவையும் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாநகராட்சிகளைத் தவிர்த்து சென்னை, சேலம், திருப்பூர், தஞ்சாவூர், ஓசூர் ஆகிய மாநகராட்சிகளில் பொதுபிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மேயர் பதவிகளுக்கான இட ஒதுக்கீட்டை நகராட்சி நிர்வாக முதன்மை செயலாளர் அறிவித்துள்ளார். 


தமிழகத்தில் 15 மாநகராட்சிகள் உள்ளன. இந்த மாநகராட்சிகளில் மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீட்டை நகராட்சி நிர்வாக முதன்மைச் செயலாளர் இன்று வெளியிட்டார். அதன் படி, தமிழகத்தில் வேலூர் மாநகராட்சி எஸ்.சி. பெண்களுக்கும், தூத்துக்குடி மாநகராட்சியில் எஸ்.சி. பிரிவைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என இருவரும் போட்டியிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில், திண்டுக்கல், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய மாநகராட்சிகளில் எல்லா பிரிவையும் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாநகராட்சிகளைத் தவிர்த்து சென்னை, சேலம், திருப்பூர், தஞ்சாவூர், ஓசூர் ஆகிய மாநகராட்சிகளில் பொதுபிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் கோவை  மாநகராட்சிக்கு முதன்முறையாக பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  தற்போது மாநகராட்சிப் பகுதிகளுக்கு இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது மாநகராட்சி, நகராட்சி பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!