கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு மத்திய அரசின் தோல்வி... பிரியங்கா காந்தி பகீர் குற்றச்சாட்டு..!

By Thiraviaraj RMFirst Published Apr 21, 2021, 11:07 AM IST
Highlights


இன்று 2,000 லாரிகள் மட்டுமே நாட்டின் அனைத்து பகுதிக்கும் ஆக்சிஜனை கொண்டு செல்கின்றன. ஆக்சிஜன் நம்மிடம் உள்ளது. ஆனால், அது எங்கு தேவைப்படுகிறதோ அங்கு சென்று சேர முடியாத சூழல் உள்ளது மிகவும் துயரமான நிகழ்வாகும்.

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை அதிதீவிரமடைந்து உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 95 ஆயிரத்து 41 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சத்து 16 ஆயிரத்து 130 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 21 லட்சத்து 57 ஆயிரத்து 538 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 67 ஆயிரத்து 457 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 32 லட்சத்து 76 ஆயிரத்து 39 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 23 பேர் உயிரந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 82 ஆயிரத்து 553 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாட்டில் பல்வேறு பகுதிகள் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், கொரோனா தடுப்பூசிகள், நோயாளிகளுக்கு வழங்கும் ஆக்சிஜன் உள்ளிட்டவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ’’உலகில் அதிக அளவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட நாடுகளில் இந்தியா முதன்மையானது. அப்படி இருக்கும் போது ஏன் தட்டுப்பாடு ஏற்படுகிறது? இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை நிச்சயம் ஏற்படும் என மத்திய அரசு ஆய்விலேயே தெரியவந்துள்ளது. உங்களுக்கு முதல் அலைக்கும் இரண்டாவது அலைக்கும் இடையே 8 முதல் 9 மாதங்கள் இருந்துள்ளது. அந்த இடைவெளியை மத்திய அரசு புறக்கணித்துவிட்டீர்கள். உங்களுக்கு நேரம் இருந்தது.

இன்று 2,000 லாரிகள் மட்டுமே நாட்டின் அனைத்து பகுதிக்கும் ஆக்சிஜனை கொண்டு செல்கின்றன. ஆக்சிஜன் நம்மிடம் உள்ளது. ஆனால், அது எங்கு தேவைப்படுகிறதோ அங்கு சென்று சேர முடியாத சூழல் உள்ளது மிகவும் துயரமான நிகழ்வாகும். கடந்த 6 மாதத்தில் 11 லட்சம் ரெம்டெசிவிர் தடுப்பூசி மருந்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இன்று நாம் தட்டுப்பாட்டை சந்தித்து வருகிறோம்.

கடந்த ஜனவர் முதல் மார்ச் மாதம் வரை மத்திய அரசு 6 கோடி கொரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அந்த நேரத்தில் 3 முதல் 4 கோடி இந்தியர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது ஏன்? மோசமான திட்டமிடலே நாட்டில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட காரணம். எந்த வித திட்டமும் இல்லாதது தான் ரெம்டெசிவிர் தடுப்பூசி மருந்து பற்றாக்குறை ஏற்பட காரணம். சரியான திட்டமிடல் இல்லாததே ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட காரணம். இது மத்திய அரசின் தோல்வியாகும்’ என அவர் குற்றம்சாட்டினார். 

click me!