மு.க ஸ்டாலினை முந்திக் கொண்ட கனிமொழி.. இதை எல்லாம் எப்பவோ செஞ்சி முடிச்சிட்டாங்களே..!

By Selva KathirFirst Published May 27, 2021, 10:45 AM IST
Highlights

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட நேற்று தான் நேமம் கிராமத்தில் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்திருகிறார். அதாவது கிட்டத்தட்ட தூத்துக்குடியில் கிராமப்பகுதி தடுப்பூசி முகாம் துவங்கப்பட்டு சுமார் 11 நாட்களுக்கு பிறகு. அந்த வகையில் கிராமங்களுக்கு தடுப்பூசிகளை கெண்டு சென்றதில் கனிமொழி தான் பாஸ்ட்.

நகரப்பகுதிகளில் ருத்ர தாண்டவம் ஆடி வந்த கொரோனா கிராமங்களிலும் தற்போது தலையெடுக்க ஆரம்பித்துள்ள நிலையில் தமிழக அரசு கிராமப்பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி மையங்களை கடந்த சில நாட்களாக துவக்கி வருகிறது, ஆனால் தூத்துக்குடி எம்பி கனிமொழியோ, இரண்டு வாரங்களுக்கு முன்னரே இந்த பணிகளை துவங்கியுள்ளார்.

சென்னை அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டத்தின் நேமம் எனும் கிராமத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். அத்தோடு தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களிலும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அதிகப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் நகரப்பகுதிகளை மட்டுமே ஆட்டிப்படைத்து வந்த கொரோனா கிராமப்பகுதி மக்களையும் அதிகம் தாக்க ஆரம்பித்தது தான். ஆனால் கிராமப்பகுதிகளில் கொரோனா தென்பட ஆரம்பித்த பிறகு தான் அப்பகுதிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்களை தமிழக அரசு அமைக்க ஆரம்பித்துள்ளது.

ஆனால் திமுக மகளிர் அணிச் செயலாளரும் தூத்துக்குடி தொகுதி எம்பியுமான கனிமொழி சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னரே இந்த பணிகளை துவக்கியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தூத்துக்குடிக்கு முதன்முறையாக சென்ற போதே கிராமங்களில் தடுப்பூசி முகாம்களை அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். அத்தோடு கிராமங்களில் நடமாடும் தடுப்பூசி முகாம்களுக்கும் கனிமொழியே ஏற்பாடு செய்தார். தடுப்பூசி திட்டம் சிறப்பாக செயல்பட ஊராட்சி தலைவர்களின் பங்கு அவசியம் என கருதிய கனிமொழி, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கும் நேரில் சென்று ஊராட்சி தலைவர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 403 கிராம ஊராட்சிகளில் , 1745 குக்கிராமங்கள் உள்ளன ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 3 நடமாடும் தடுப்பூசி குழு என மொத்தம் 36 நடமாடும் தடுப்பூசி குழு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் இரண்டு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் அடங்கிய நடமாடும் தடுப்பூசி குழு  காலை 9 மணி முதல் 12 மணி வரை ஒரு கிராமத்திலும் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு கிராமத்திலும் என இரண்டு வேலையாக சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறது. தடுப்பூசி குழு வருகை தொடர்பாக முதல் நாளே அங்குள்ள பொதுமக்கள் அனைவருக்கும் ஆட்டோ விளம்பரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

மேலும் அந்தப் பகுதி ஊராட்சி தலைவர்களும் அலுவலர்களும் பொதுமக்களுக்கு நேரில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர் ஆரம்பத்தில் 21 நாட்களுக்குள் இந்த நடமாடும் தடுப்பூசி மையத்தை முடிக்க திட்டமிட்ட நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என்பதால் தற்போது நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கொரோனாவால் கிராமங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே அறிந்து கனிமொழி இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளார். தமிழக அரசே கூட கிராமங்களுக்கு கொரோனாவல் ஏற்படும் பாதிப்புகளை பற்றி தாமதமாகவே உணர்ந்துள்ளது.

அதனால் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட நேற்று தான் நேமம் கிராமத்தில் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்திருகிறார். அதாவது கிட்டத்தட்ட தூத்துக்குடியில் கிராமப்பகுதி தடுப்பூசி முகாம் துவங்கப்பட்டு சுமார் 11 நாட்களுக்கு பிறகு. அந்த வகையில் கிராமங்களுக்கு தடுப்பூசிகளை கெண்டு சென்றதில் கனிமொழி தான் பாஸ்ட்.

click me!