மீண்டும் மரண பயத்தை காட்டும் கொரோனா.. தமிழகத்தில் நிலை என்ன?அமைச்சர் மா.சு பரபரப்பு தகவல்..!

By vinoth kumar  |  First Published Dec 21, 2022, 11:17 AM IST

ஜப்பான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு அறிவுறுத்தல்படி கொரோனா டெஸ்ட் எடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறோம்.


சீர்காழியில் கால் அழுகல் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால் அந்த நாட்டில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் மத்திய அரசு மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்;- ஜப்பான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு அறிவுறுத்தல்படி கொரோனா டெஸ்ட் எடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறோம். 

Tap to resize

Latest Videos

undefined

கொரோனா வைரஸ் உருமாற்றத்தை கருத்தில் கொண்டு 4 கோடி ரூபாய் செலவில் மரபணு பகுப்பாய்வு கூடம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேவையான அளவிற்கு பரிசோதனை மையங்கள் உள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தாலும், தமிழ்நாட்டில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், சீர்காழியில் கால் அழுகல் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமியை காப்பாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

click me!