ஒற்றை ஆளாய் 1 லட்சத்து 10 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணம்... அசத்தும் நடராஜ்..!

Published : Aug 07, 2020, 05:05 PM IST
ஒற்றை ஆளாய் 1 லட்சத்து 10 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணம்... அசத்தும் நடராஜ்..!

சுருக்கம்

உலகையே கொரோனா பொருளாதார பாதிப்புக்கு தள்ளியுள்ள நிலையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., என்.எஸ்.என்.நடராஜன் ஒரு லட்சத்து 10 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கி அசத்தி உள்ளார். 

உலகையே கொரோனா பொருளாதார பாதிப்புக்கு தள்ளியுள்ள நிலையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., என்.எஸ்.என்.நடராஜன் ஒரு லட்சத்து 10 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கி அசத்தி உள்ளார்.

அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.எம்.ஏ.,வும், காங்கேயம் ஒன்றிய செயலாளருமாக இருப்பவர் என்.எஸ்.என். நடராஜன். கொரோனா தொற்று பேரிடர் காலத்தில், ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், கடந்த மே மாதம் முதல் மற்றும் இரண்டாம் வாரங்களில், காங்கேயம் தொகுதிக்கு உள்ளடங்கிய வெள்ளகோவில், காங்கேயம், சென்னிமலை, குண்டடம், முத்தூர் போன்ற பகுதிகளின் அனைத்து ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் குடும்பங்களுக்கு, ஐந்து கிலோ அரிசி மற்றும் தேங்காய் எண்ணெய்த் தொகுப்பினை தனது சொந்த பணத்தில்  மூன்று கோடி ரூபாய் செலவழித்து கொரோனா நிவாரணம் வழங்கி வருகிறார். 

ஒர்றை ஆளாய் இவ்வளவு நிவாரணம் வழங்கியதற்காக அப்பகுதி மக்கள் நடராஜுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி